மோடி அரசு மீது 26 சதவீத குஜராத் மக்களுக்கு அதிருப்தியாம்.. இந்தியா டுடே சர்வே
மத்திய மோடி அரசின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளதாக 25 சதவீதம் பேரும், மோசம் என 17 சதவீதம் பேரும், மிக மோசம் என்று 9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி: குஜராத்தில் 26 சதவீத மக்கள் மத்திய மோடி அரசு மீது வெறுப்பில் உள்ளதாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
ஆக்சிஸ்-மை இந்தியா இணைந்து இந்தியா டுடேவுக்காக இணைந்து நடத்திய சர்வேயில், குஜராத் சட்டசபை தேர்தலில். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 115-125 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதால் நன்மை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, 38 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பண மதிப்பிழப்பால் பலன் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு 44 சதவீதம் பேர் ஆதரவாகவும், 53 சதவீதம் பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் வணிகர்கள் அதிகமுள்ள மாநிலம் என்பது கவனிக்கத்தக்கது.
மோடி பிரதமராக இருப்பதால்தான் குஜராத் பலன் பெற்றுள்ளதாக 66 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அதேநேரம், மத்திய மோடி அரசின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளதாக 25 சதவீதம் பேரும், சிறப்பாக உள்ளதாக 49 சதவீதம் பேரும், மோசம் என 17 சதவீதம் பேரும், மிக மோசம் என்று 9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோசம் மற்றும் மிக மோசம் என்போரின் கூட்டுத்தொகை 26 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மொத்த வாக்கு சதவீதத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதி பிரிவில் 37 சதவீதமும், பழங்குடியினரில் 15 சதவீதம் பேரும், பொதுப்பிரிவில் 15 சதவீதமும் அடங்கும்.
காங்கிரஸ் வாக்கு பங்கில் 10 சதவீதம் முஸ்லிம்களுடையது. 6 சதவீதம் தாழ்த்தப்பட்டோருடையது. பட்டேல் இனத்தினுடைய வாக்கு பகிர்வு 16 சதவீதமாகும்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications