எதே.. மோடி பானி பூரி விற்கிறாரா? அதே தாடி, கண்ணாடி, குர்தா! அச்சு அசல் தோற்றத்தில் குஜராத் வியாபாரி
குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியை போன்றே தோற்றம் கொண்ட நபர் ஒருவர் பாணி பூரி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியை போன்றே தோற்றம் கொண்ட நபர் அவரை போலவே மூக்குக் கண்ணாடி, குர்தா அணிந்துகொண்டு குஜராத்தில் பாணி பூரி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதற்காக அவரது கடைக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகில் ஒரு மனிதரின் தோற்றத்தில் 7 பேர் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. ஆனால், அறிவியல்பூர்வமாக அதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. ஆனால், இரட்டை குழந்தைகள் பெரும்பாலும் ஒரே தோற்றத்துடன் இருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.
அதேபோல், அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்களை போன்றே உருவ ஒற்றுமை கொண்டவர்கள் சமூக வலைதங்களில் அவர்களை போன்றே ஆடை அணிந்து புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கமாக உள்ளது.

ஒரே தோற்றம்
இதன் மூலம் அவர்களும் மக்கள் மனதில் பிரபலமாகி விடுகிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி, கருணாநிதி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பிரபல நடிகர்களை போன்றும் உருவ ஒற்றுமை கொண்டவர்களை பார்த்திருப்போம். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி போன்றும் உருவ ஒற்றுமை கொண்டவர்கள் என்று பலரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வருகின்றன.

மோடியை போன்ற பாணி பூரி வியாபாரி
ஆனால், லேசான முக சாடை இருக்குமே தவிர அப்படியே பிரதமர் மோடி போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபரை பெரும்பாலானோர் பார்த்தது கிடையாது. இந்த நிலையில்தான் குஜராத்தை சேர்ந்த பாணி பூரி வியாபாரி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை போன்றே உருவ ஒற்றுமை கொண்டு இருக்கிறார் என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அதே மேக் அப்
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் வல்லப் வித்யாநகரின் மோட்டா பஜாரில் பாணி பூரி கடை நடத்தி வரும் அனில் பாய் கட்டார் என்ற வியாபாரிதான் மோடியை போன்றே உருவ ஒற்றுமை கொண்டு இருப்பதாக வீடியோ வெளியாகி வருகிறது. தலைமுடி, கண்ணாடி, தாடி, குர்தா என அனைத்தையும் பிரதமர் மோடி போன்றே வைத்து அவரது உருவத்துடன் காட்சி தருகிறார் அனில்.
டிரெண்டான வீடியோ
வலது மற்றும் இடதுபுறம் பார்த்தாலும் பிரதமர் நரேந்திர மோடியை போன்றே இருக்கிறார் அனில் பாய். பிரபல யூடியூபரான கரன் தாக்கர், அனில் கடைக்கு பானி பூரி சாப்பிட சென்றபோது அவர் பிரதமர் மோடியின் தோற்றத்தில் இருப்பதை கண்டு வியந்து அவரிடம் பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த மக்களும் அவர் மோடியின் தோற்றத்தில் இருப்பதாக கருத்திட்டு வருகிறார்கள்.
அவர் டீ.. நான் பாணி பூரி
அந்த வீடியோ 65 லட்சம் பார்வைகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த மற்ற யூடியூபர்களும், ஊடகங்களும் அனில் பாணி பூரி கடையில் குவிந்து வருகிறார்கள். இதுகுறித்து பேசிய அனில், "மோடி தேனீர் விற்பனை செய்தார். நான் பாணி பூரி விற்கிறேன். மோடியை போன்றே எனது பக்கவாட்டு தோற்றம் இருக்கும். அவரை போன்றே மேக் அப் செய்துகொண்டேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications