நோ ஜாமீன்.. 6 மாத விசாரணை.. ஒட்டுக் கேட்பு.. குஜராத் பயங்கரவாத தடுப்பு சட்டத்தோட 'நிஜ' முகம்
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமானது தமிழகம் ஏற்கெனவே அனுபவித்த தடா, பொடா போன்றவற்றின் கொடிய அம்சங்களைக் கொண்டதாக கைதானால் ஜாமீனே கிடைக்காத பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது.
சர்ச்சைக்குரிய பிரிவுகளை உள்ளடக்கிய பயங்கரவாத தடுப்பு மசோதா குஜராத் மாநில சட்டசபையில் செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டது. 2003-ம் ஆண்டின் குஜராத் குற்றத் தடுப்பு மசோதா சர்ச்சைக்குரிய வகையில் திருத்தம் செய்யப்பட்டு குஜராத் பயங்கரவாத மற்றும் குற்றத் தடுப்பு மசோதாவாக செவ்வாயன்று நிறைவேறியது.
இதில் உள்ள பிரிவு 16 பிரச்சினைக்குரியதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் அளித்ததாக சொல்லப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுமாம்.

வாக்குமூலம் செல்லும்
இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களில் சில:
காவல்துறை கண்காணிப்பு அதிகாரி மட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் வாக்குமூலங்கள் அளித்தால் அது நீதிமன்றத்தில் நேரடியாக செல்லுபடியாகுமாறு இந்த மசோதா அமைக்கப்பட்டுள்ளது.

6 மாத விசாரணை
ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரிடம் 6 மாத காலம் வரை தொடர்ந்து விசாரணை நடத்தலாமாம். அதாவது விசாரணை கால அவகாசம் 90 நாட்களிலிருந்து 180 நாட்களாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

நோ ஜாமீன்
இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடையாது. 20 (4) என்ற பிரிவு இதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஒட்டுக் கேட்கலாம்
இணையம் வழி உரையாடல் மற்றும் தொலைபேசிப் பேச்சு ஆகியவற்றை இடைமறித்து ஒட்டுக் கேட்டு திரட்டப்படும் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படும். இந்த ஒட்டுக்கேட்புக்கு முழு அதிகாரம் கொடுக்கப்படுகிறது.

அரசியல் ஆதாயம்
இந்த புதிய மசோதாவை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் உறுப்பினர் சக்திசின் கோஹில், இச் சட்டம் தேசிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரானது, மாநில அரசு இது போன்ற ஒரு சட்டத்தை ஏற்படுத்த அதிகாரம் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக இந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications