'வொய் திஸ் கொலவெறி?' VS 'மோக்கா, மோக்கா'.. குஜராத் தேர்தலில் ஒரே கூத்துதான்!
காந்திநகர்: "வொய் திஸ் கொலவெறி.." குஜராத்தில் காங்கிரசின் தாரக மந்திரமாக மாறியுள்ள நிலையில், பாஜகவோ, "மோக்கா.. மோக்கா" பாடலை கையில் எடுத்துள்ளது.
இது இணையதள யுகம். உலகிலேயே அதிகம் இணையம் பயன்படுத்தும் இந்திய நாட்டில் இனி தேர்தல்களும் டிஜிட்டல் மயம் ஆவதுதானே காலத்தின் கட்டாயம். அதன் ஒரு பகுதிதான், சுவரொட்டிகளுக்கு பதிலாக வளர்ந்து விட்ட மீம்ஸ்கள்.
சைதை தமிழரசி டைப் பேச்சாளர்களுக்கு பதிலாக வந்துள்ளதுதான் வீடியோ மீம்ஸ் எடிட்டிங்குகள். இதற்கு குஜராத் டிரையல் பார்த்துக்கொண்டுள்ளது.

பாஜக முயற்சி
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் பாஜக கடும் முயற்சிகளை தொடங்கிவிட்டது. பிரதமர் மோடி குஜராத் மாநில முன்னாள் முதல்வர் என்பதால், அவருக்கு இது இமேஜ் பிரச்சினையாக உருமாறியுள்ளது. குஜராத் தேர்தலில் ஒருவேளை பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டால் அது 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் முன்னோட்டமாக கருதப்படும் என்பதாலும், மோடிக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துவிடும் என்பதாலும் குஜராத் தேர்தலில் வெற்றிபெற பாஜக அனைத்து வகை முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

வளர்ச்சி பிரசாரம்
குஜராத்தில் தொடர்ச்சியாக பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், குஜராத் மாநிலம் வளர்ச்சியடைந்துவிட்டதாக கூறி பிரசாரம் செய்யும் முயற்சிகளில் பாஜக இறங்கியுள்ளது. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற பிரசாரம் முன்வைக்கப்பட்டதை போல இப்போது, குஜராத்தில் எடுத்துள்ள வாசகம்தான், 'விகாஸ் கான்டோ தயோ ச்சே'
|
கொலவெறி பாடல்
ஆனால், தனுஷ் நடித்த '3' திரைப்படத்தில் இடம்பெற்ற, வொய் திஸ் கொலவெறி பாடல் வரிகளை டப் செய்து 'விகாஸ் கான்டோ தயோ ச்சே' என்று ஆரம்பிக்கும் வகையில் பாடல் மாற்றியமைத்துள்ளது காங்கிரஸ். இப்படி ஒரு வீடியோ மீம்ஸ் காங்கிரஸ் வட்டாரத்தில் இப்போது பிரபலம். அந்த வீடியோவில் தனுஷ் ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதில் ரோடு இல்லை, பிசினஸ் இல்லை, வரிக்கு மேல் வரி, வேலை வாய்ப்பு இல்லை என்பது போன்ற பாடல் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது குஜராத் சோஷியல் மீடியாக்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
|
ராகுல் காந்தியும் அதேயே கேட்டார்
இரு தினங்கள் முன்பு, அமித்ஷா மகன் ஜெய்ஷா குறித்த முறைகேடு பற்றி காங். துணை தலைவர் ராகுல் காந்தி டிவிட் செய்திருந்தார். அதிலும் வொய் திஸ் கொலவெறி டா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் ராகுல் காந்தி. மீம்ஸ் போட்டியில் பாஜக மட்டும் சளைத்தது கிடையாதல்லவா. இதனால் மோக்கா.. மோக்கா பாடலை கையில் எடுத்து களமிறங்கிவிட்டனர் தாமரை கட்சியினர்.
|
மோக்கா, மோக்கா
2015ம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை நடைபெற்றபோது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மோக்கா, மோக்கா பாடலை பயன்படுத்தியது. பாகிஸ்தானால் உலக கோப்பை தொடர் எதிலுமே இந்தியாவை வெல்ல முடியவில்லை என்பதை கேலி செய்யும் பாடல் அது. பாக். ரசிகர்கள் பட்டாசை எடுப்பதும், தங்கள் அணி தோற்றதும், அதை பரணில் தூக்கி போடுவதும் தலைமுறை கடந்தும் தொடர்கிறது என்பதை அந்த பாடல் காட்சி விவரித்தது. குஜராத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்கள், கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்விகளை தழுவியதை ஒப்பிட்டு மோக்கா பாடலை பாஜக இணையத்தில் பரப்பி வருகிறது. இப்படியாக இரு தரப்பும் டிஜிட்டல் யுத்தத்தை நடத்தியபடி உள்ளன.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications