கேரளா எல்லையில் மாவோயிஸ்டுகளுடன் போலீஸ் பயங்கர துப்பாக்கி சண்டை!
பாலக்காடு: கேரளா- தமிழக எல்லையில் தேடுதல் நடவடிக்கையின் போது மாவோயிஸ்டுகளுக்கும் கேரளா போலீசாருக்கும் இடையே நேற்று 2 மணிநேர பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இன்றும் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக- கேரளா எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள செல்லும் கேரளா போலீசார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாகிச் சூடு நடத்துவதும் அதைத் தொடர்ந்து இருதரப்புக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெறுவதும் தொடர் நிகழ்வாகி வருகிறது.

இதனிடையே கேரளாவின் அமைதிப் பள்ளதாக்கு அருகே உள்ள அம்பலப்பார பகுதியில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். நேற்று மாலை 6.30 மணியளவில் திடீரென அதிரடிப்படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் .இதற்கு அதிரடிப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே 2 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இதில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து இன்றும் அப்பகுதியில் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications