பஞ்சாபில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை சுற்றிவளைத்த ராணுவம்: ஒரு தீவிரவாதி பலி
குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் உடையில் வந்த தீவிரவாதிகள் காவல் நிலையம் மற்றும் பேருந்து மீது தாக்குதல் நடத்தியதில் 6 பொதுமக்கள் மற்றும் 2 போலீசார் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ராணுவத்தினர் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் கட்டிடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினாநகர் காவல் நிலையம் மற்றும் பேருந்து ஒன்றின் மீது ராணுவ உடையில் இருந்த 4 தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பொதுமக்கள் மற்றும் 2 போலீசார் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தீவிரவாதிகள் யாரையும் பிணையக்கைதிகளாக பிடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. காவல் நிலையத்தில் 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் 15 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
காலை 5.30 மணிக்கு நடந்த இந்த தாக்குதலால் குர்தாஸ்பூரில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையினரை உடனே தினாநகர் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாருக்கு உதவுமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். தீவிரவாதிகள் காவல் நிலையம் அருகே உள்ள காலி கட்டிடத்தில் பதுங்கியுள்ளனர்.

இந்த தாக்குதலை அடுத்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே நடந்துள்ளது. இதற்கிடையே பதன்கோட்-அமிர்தசரஸ் ரயில் பாதையில் 5 குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
ராஜ்நாத் சிங் உத்தரவை அடுத்து ராணுவ வீரர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் கட்டிடத்தைதை சுற்றிவளைத்துள்ளனர். பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க ராணுவத்தினர் முயன்று வருகிறார்கள். இந்நிலையில் தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு வீரர் காயம் அடைந்தார்.

இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவர் பலியாகியுள்ளார். இதற்கிடையே ராஜ்நாத் சிங் பஞ்சாப் முதல்வருடன் தொலைபேசியில் பேசி நிலைமை குறித்து விவரம் பெற்றுள்ளார். மேலும் பஞ்சாபில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் குர்தாஸ்பூரில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications