பெற்ற மகளையே 6 மாதமாக பலாத்காரம் செய்த கொடூரம்... வீட்டுக்கு வீடு நடப்பது சகஜம் என தேற்றிய அவலம்
பெற்ற மகளையே 6 மாதமாக பலாத்காரம் செய்த தந்தையை போலீஸுடம் அவரது 2-ஆவது மனைவியே பிடித்துக் கொடுத்தார்.
Recommended Video

குர்கான்: குர்கானில் 37 வயது மதிக்கத்தக்க தந்தை தனது முதல் மனைவிக்கு பிறந்த 13 வயது மகளை 6 மாதங்களாக பலாத்காரம் செய்தார். இதை கையும் களவுமாக பிடித்த அந்த நபரின் இரண்டாவது மனைவி போலீஸில் பிடித்துக் கொடுத்தார்.
குர்கான் அருகே பட்டோடி என்ற இடத்தை சேர்ந்தவர் பிண்டு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள கிராமத்தில் ஒரு சிறிய தொழிற்சாலையில் வசித்து வருகிறார்.
பணி முடிந்ததும் இவர் தனது குடும்பத்தினருடன் அங்கேயே தங்கிவிடுவார். பிண்டுக்கு முதல் மனைவிக்கு பிறந்த 13 வயது மகள் மற்றும் 2-ஆவது மனைவிக்கு பிறந்த 3 குழந்தைகள் என 4 பேர் உள்ளனர்.

வெளியே சொல்லக் கூடாது
பிண்டு கடந்த 6 மாதங்களாக 13 வயது சிறுமி, அதாவது தனக்கும் முதல் மனைவிக்கும் பிறந்த குழந்தையை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை வெளியே கூறக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

நடந்தவற்றை கூறினார்
இதன் அச்சமடைந்த அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்தாள். ஆனால் நாளுக்கு நாள் பிண்டுவின் தொல்லை தாள முடியாததால் தனது மாற்றாந்தாயிடம் நடந்தவற்றை கூறினார். ஆனால் அவரோ சிறுமி கூறுவதை நம்பவில்லை.

போலீஸில் ஒப்படைப்பு
எனினும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த மாற்றாந்தாய் சீக்கிரமாக வீடு திரும்ப முடிவு செய்தார். அதன்படி வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தனது மகள் என்றும் பாராமல் பிண்டு அந்த சிறுமியை பலாத்காரம் செய்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.

குற்ற உணர்ச்சியே இல்லை
பின்னர் அந்த சிறுமியை போலீஸார் மாற்றாந்தாயுடன் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் இந்த விவகாரம் குறித்து பிண்டுவிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் தான் செய்ததற்கு வருத்தப்படுவதோ குற்ற உணர்ச்சியோ ஏதும் இல்லாமல் காணப்பட்டார்.

சிறுமியை நம்ப வைத்த அவலம்
சர்வ சாதாரணமாக இருந்தார். எனினும் மேற்கொண்டு விசாரணை செய்த போது பிண்டு கூறியதை கேட்டு போலீஸாரே அதிர்ச்சியில் உறைந்தனர். வீட்டுக்கு வீடு இதுபோல் பாலியல் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் என்று சிறுமியை நம்ப வைத்ததாக பிண்டு கூறினார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications