ஃபைவ் ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் ராம் ரஹீமின் ரகசிய அறை.. வெளியானது வீடியோ!
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 20 ஆண்டு தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம் ரஹீமின் ஆசிரமத்தில் போலீசார் நடத்திய சோதனைக் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சண்டிகர் : பாலியல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள பாபா குர்மீத் ராம் ரஹீமின் உட்புற அறைக் காட்சிகளை சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தேரா சச்சா அமைப்பின் தலைவராக 23 வயதில் பொறுப்பேற்றவர் பாபா குர்மீத் ராம் ரஹீம். தனது ஆசிரமத்தில் பெண்களை புனிதப்படுத்துவதாகக் கூறி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2 பெண் பக்தர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி பாலியல் வழக்கில் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குர்மீத் ராம் ரஹீமை சிறையில் அடைத்ததால் அவருடைய பக்தர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாபா குர்மீத் ராம்ரஹீமின் ஆசிரமத்தில் போலீசார் நுழைந்துள்ளனர்.

பிரம்மாண்ட அறை
இதில் ஹரியானாவில் உள்ள ராம்ரஹீமின் அறைக்குள் போலீசார் சோதனையிடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. பாகுபலி செட் போல மிக பிரம்மாண்டமாக இருக்கும் அந்த அறையில் இருக்கும் காட்சிகள் கண்களை அகல விரிய வைக்கின்றன.

அரண்மனை போன்ற அமைப்பு
ராஜசிம்மாசனம் போன்ற இருக்கைகள், அரண்மனைகளில் இருப்பது போன்ற டைனிங் டேபிள்கள் என மினி அரண்மனையாகவே இருக்கிறது அந்த அறை. இதையெல்லாம் தாண்டி உள்ளே படுக்கையறையை சென்று பார்த்தால் அங்கு போடப்பட்டிருக்கும் கட்டிலும், மெத்தையுமே ராம் ரஹீமின் சொகுசு வாழ்க்கையை உணர்த்துகின்றன.

வெண்பட்டு நாற்காலி
இவற்றை தாண்டி ஒவ்வொரு அறையாக புகுந்து போலீசார் தாழிடப்பட்டிருக்கும் அறைகளை கால்களால் உதைத்து திறக்கின்றனர். இதில் என்ன பிரமாதம் என்றால் பாபா ராம்தேவ் அமரும் வெண்பட்டு மெத்தையால் ஆன நாற்காலி ஒரு துணி கொண்டு மூடப்பட்டிருக்கிறது.
|
காவல்துறையினரே வெளியிட்ட காட்சிகள்?
படுக்கையறை மட்டுமே அகன்று விரிந்து சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல படுக்கையறையிலும் கூட பல்வேறு நாற்காலிகள் போடப்பட்டு இருக்கின்றன. இந்தக் காட்சிகளை காவல்துறையினரே பதிவிட்டு வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications