ஹரியானா: ஆன்லைனில் டீச்சருக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த 7ம் வகுப்பு மாணவர் சஸ்பெண்ட்
வகுப்பாசிரியைக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த 7ம் வகுப்பு மாணவரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
டெல்லி: ஹரியானாவில் 7ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது ஆசிரியையையும், அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக ஆன்லைனில் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களுள் ஒன்று குருகிராம். டெல்லிக்கு அருகில் அமைந்துள்ள இந்நகரில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர், தனது வகுப்பாசிரியைக்கு இணையம் வாயிலாக மிரட்டல் பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர், ஆசிரியையும் அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். ஆசிரியையின் மகளும் அதே வகுப்பில் படித்து வருபவர் தான்.
இந்த மிரட்டல் குறித்து ஆசிரியை அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மாணவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை தற்காலிக இடைநீக்கம் செய்ததுடன், உளவியல் தொடர்பான கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் அவரின் மகள் பெயர் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதால், அம்மாணவர் பயிலும் பள்ளியின் பெயரை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு கொஞ்சகாலம் முன்பு தான் இதே பள்ளியில் பயிலும் மற்றொரு 8ம் வகுப்பு மாணவர், தனது ஆசிரியையை உல்லாசமாக இருக்க ஈமெயில் மூலம் அழைத்த அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக உளவியல் நிபுணர்கள் கூறுகையில், “இணையத்தின் வாயிலாக இன்று குழந்தைகளின் கண்களுக்கு வன்முறை, திருட்டு, கொலை, பலாத்காரம் என அனைத்து தீய விசயங்களுமே எளிதாகக் கிடைக்கின்றன. பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களும் நல்ல மற்றும் தீய தொடுதல் குறித்த விளக்கங்களை அளிக்கவும் மறந்து விடுகின்றனர். இதனால் எளிதாக மாணவர்கள் தீய வழிக்கு திசை மாற வாய்ப்புகள் அதிகமாகி விடுகிறது. எனவே, வீட்டில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் இணையத்தில் என்னமாதிரியான விசயங்களைப் பார்க்கின்றனர் என்பதைக் கண்காணிக்க வேண்டும். அதேபோல், பள்ளியிலும் ஆசிரியர்கள் தங்களால் இயன்றளவிற்கு இணையத்தின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது குழந்தைகளை திசை மாறிப் போய்விடாமல் காப்பாற்ற முடியும்” என்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications