குட்கா விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது திமுக
குட்கா விவகாரத்தில் திமுக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: குட்கா விவகாரத்தில் திமுக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.
கடைகளில் குட்கா, பான்மசாலா விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி கடைகளில் குட்கா, பான்மசாலா விற்பனை செய்யப்படுகிறது.

குட்கா விற்க அமைச்சர் சி.விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் குட்கா மொத்த வியாபாரியிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதித்ததாக திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்க அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் திமுக தரப்பை விசாரிக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications