ஃபிட்னஸ் சேலஞ்ச்.. தேவகவுடாகிட்ட ஜோடி போட முடியுமா, ஜோடி.. மோடிக்கு மஜதவினர் கேள்வி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஃபிட்னஸ் சேலஞ்ச் என்ற பெயரில், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
மேலும், கர்நாடக முதல்வர் குமாரசாமி இந்த சேலஞ்சுக்கு ரெடியா என கேட்டிருந்தார். குமாரசாமியோ, மாநிலத்தின் ஃபிட்னஸ் பற்றி தான் அதிகம் கவலைப்படுவதாகவும், அதற்கு பிரதமர் உதவ வேண்டும் என்றும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், சில ஆண்டுகள் முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட குமாரசாமியை பிட்னஸ் சேலஞ்சுக்கு அழைப்புவிடுத்த மோடி மீது மஜத தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அசத்தும் தேவகவுடா
மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஃபிட்னஸ் முன்பாக நிற்க முடியாது என்கிறார்கள். இதில் உண்மையும் உள்ளது. 86 வயதாகும் தேவகவுடா இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். 7 முறை சட்டசபை உறுப்பினராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். இவர் தனது உடல் நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பெங்களூரிலுள்ள தேவகவுடா வீட்டில் பிரத்யேக ஜிம் உள்ளது.

பிட்னஸ் ரகசியம்
கார்த்திக் என்பவர் தேவகவுடாவின் பயிற்சியாளராக உள்ளார். இதுபற்றி தேவகவுடா கூறுகையில், எனக்கு மது, புகை பழக்கம் கிடையாது. அளவாக வெஜிட்டேரியன் உணவுகளை மட்டும் சாப்பிட்டு வருகிறேன். அதிகம் தூங்கமாட்டேன். காலையிலேயே விழித்துவிடுவேன். எனக்கு பேராசை எல்லாம் கிடையாது. இதெல்லாம்தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது என நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

அக்கறை அதிகம்
தான் உடல்பயிற்சி மேற்கொள்வது நீண்டகால பழக்கம் என்றும், இது பெரிய விஷயம் இல்லை என்றும் தேவகவுடா தெரிவித்துள்ளார். தேவகவுடா மிக கடினமாக உடல் பயிற்சி செய்ய கூடியவராம். அவர் அளவுக்கு 40 வயது நபர்களால் கூட போட்டிபோட முடியாது என்கிறார்கள் தேவகவுடாவுக்கு நெருக்கமானவர்கள்.

மீம்கள்
பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில், அவர் செய்யும் உடற் பயிற்சிகள் மிகவும் சாதாரண வகையில் இருந்தன. இதனால் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வீடியோ, மீம்கள் உலவத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications