ஜே.என்.யூ. விவகாரத்தில் இந்தியர்களை மோடி அரசு முட்டாளாக்குகிறது- லஷ்கர் தலைவர் சயீத்
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி இந்திய அரசு அதன் மக்களை முட்டாள் ஆக்குகிறது என்று லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் புகழ்பாடும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அப்சல் குருவை பாராட்டியும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர்கள் சங்க தலைவர் கன்ஹையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் ஆதரவளித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து சயீத் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
இந்திய அரசு
ஜேஎன்யூ போராட்டம் குறித்து என் பெயரில் ட்விட்டரில் உள்ள போலி கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதை வைத்து என் மீது குற்றம்சாட்டுவது இந்திய அரசு அதன் மக்களை முட்டாள் ஆக்குவதற்கு சிறந்த உதாரணம்.
|
குற்றச்சாட்டு
பாகிஸ்தான் மீது உள்ள வெறுப்பு மற்றும் பகையால் தான் இந்தியா இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறது.
|
மோடி அரசு
26/11 உள்பட அனைத்து விஷயங்களிலும் இந்தியாவின் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை இந்த போலி ட்விட்டர் கணக்கு மூலம் தெரிய வந்துள்ளது. இந்திய அரசு இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்துள்ளது.

அப்சல் குரு
கடந்த 9ம் தேதி இரவு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தீவிரவாதி அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை சில மாணவர்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications