For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பீரியட்ஸ்".. அந்த 3 நாட்களுக்கு லீவு.. அரசு அதிரடி.. பெண்கள் செம ஹேப்பி.. எங்கேன்னு பாருங்க..!

பெண்களுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

மாட்ரிட்: பெண்களுக்கு மாதம் 3 நாள் விடுமுறையை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. நமக்கில்லை.. ஸ்பெயின் நாட்டில்..!

பொதுவாக, பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான சங்கடமும், பிரச்சனையும் மாதவிடாய்தான்.. உடல் ஆரோக்கியத்துக்கு இது மிக முக்கிய காரணம் என்றாலும், பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால், அது தொடர்பான சிக்கலையும் சந்திக்கிறார்கள்.

வயிறு, கால் வலி, உடல் உபாதைகள் போன்ற கோளாறுகளுக்கும் ஆளாக வேண்டி உள்ளதை மறுக்க முடியாது.. இப்படிப்பட்ட சூழலில் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லி உள்ளது ஸ்பெயின் நாட்டு அரசு..

'மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போடக்கூடாது'.. பெண்களை திருப்பி அனுப்பிய தடுப்பூசி மையங்கள்.. சர்ச்சை'மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போடக்கூடாது'.. பெண்களை திருப்பி அனுப்பிய தடுப்பூசி மையங்கள்.. சர்ச்சை

விடுமுறை

விடுமுறை

ஐரோப்பிய பிராந்தியத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதத்தில் 4 நாட்கள் மாதவிடாய் விடுமுறை தர போகிறார்களாம்.. ஏற்கனவே ஒரு சில நாடுகளில் மட்டுமே இந்த நடுமுறை உள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டிலும் மாதவிடாய் கால விடுமுறை வழங்கப்படுகிறது.. அதாவது, ஜப்பான், தென் கொரியா, இந்தோனேஷியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது..

மாதவிடாய்

மாதவிடாய்

அமெரிக்காவில், ஒரு சில நிறுவனங்கள் மாதவிடாய் விடுமுறையை வழங்குகின்றன. ஆனால், ஐரோப்பிய நாடுகளில் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது ஸ்பெயின்தான். அடுத்த வாரமே இந்த திட்டம் அமலுக்கு வரப்போகிறதாம்.. இதைதவிர, இந்த நாட்டில், சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும் பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது..

சானிட்டரி பேட்கள்

சானிட்டரி பேட்கள்

அதேபோல, சானிட்டரி பேட்கள், டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து வாட் வரியை நீக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட உள்ளதாம்.. இந்த கோரிக்கையை அந்நாட்டு பெண்கள் நீண்ட காலமாகவே விடுத்து வந்தனர். இப்படி ஒரு முடிவை இந்த நாடு அறிவிக்க முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், மூன்றில் ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இங்கு சந்திக்கிறார்களாம்.. இதை ஒரு ஆய்வு சொல்கிறது..

பூரிப்பு

பூரிப்பு

குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக வலியான டைசெமோனரியா, அடிவயிறு வலி, காய்ச்சல், கடும் தலைவலி, வயிற்றுப்போக்கு போன்றவைகளால் பெண்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதாகவும் அந்தஆய்வில் வெளிவந்துள்ளது.. அதனாலேயே இந்த சிறப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளதாம். ஸ்பெயின் நாட்டு பெண்களை மகிழ்விக்கவும், அவர்களது உடல் நலனில் அக்கறை கொண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பெண்கள் பூரிப்பில் உள்ளனர்..

English summary
Happy news and first western country spain announces, 3 days of menstural leave for women பெண்களுக்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X