மேற்கு வங்கத்தில் 2 பேரின் மிரட்டல் தாங்க முடியால் விஷம் குடித்த இளம்பெண்
கொல்கத்தா: தனக்கு தொல்லை கொடுத்து வந்தவர் மீது புகார் கொடுத்த 20 பெண் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தததால் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பாரக்னாஸ் மாவட்டம் ஹப்ராவைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் தனக்கு தொல்லை கொடுத்து வந்த ஒரு ஆண் மீது போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட அந்த நபர் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன் பிறகு அந்த நபரின் கூட்டாளிகள் புகார் கொடுத்த பெண்ணை மிரட்டத் துவங்கினர். இதற்கு பயந்து கொண்டு அந்த பெண் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தார்.
இந்நிலையில் அவர்களின் தொடர் மிரட்டலுக்கு பயந்து அந்த பெண் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மேற்கு வங்க மாநிலத்தில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி தீக்குளித்து பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications