80ஸ் பில்லா, 90ஸ் பாட்ஷா, 2கே அண்ணாத்த.. என் மாருமேல சூப்பர் ஸ்டார்.. தலைவா! ஹர்பஜன் சிங் வாழ்த்து
அமிருதசரஸ்: சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என தனது ட்விட்டரில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை நள்ளிரவு 12 மணி முதலே ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
காலை முதல் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், மலையாள நடிகர் மம்முட்டி, திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஹர்பஜன் சிங் ட்வீட்
அந்த வகையில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கும் தனக்கே உரிய ஸ்டைலில் வழக்கம் போல் தமிழில் வாழ்த்துகளை கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டரில் "என் மாருமேல சூப்பர் ஸ்டார்"
80's பில்லாவும் நீங்கள் தான்
90's பாட்ஷாவும் நீங்கள் தான்
2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா
@rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDSuperstarRajinikanth #SuperstarRajinikanth #ரஜினிகாந்த்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டாட்டூ
தனது நெஞ்சில் ரஜினிகாந்தின் முகத்தை டாட்டூவாக வரைந்துள்ளார் ஹர்பஜன் சிங். தனது ட்வீட்டில் ரஜினியின் சூப்பர்ஹிட் படங்களாக பில்லா, பாட்ஷா, அண்ணாத்த படங்களை குறிப்பிட்டுள்ளார். இந்திய அணிக்காக 1998ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பல்வேறு போட்டிகளில் ஹர்பஜன் சிங் விளையாடியுள்ளார்.

திரைப்படம்
தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஹர்பஜன். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். அண்மையில் தமிழில் வெளிவந்த பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்திருந்த வெற்றியை கொடுக்கவில்லை.
Recommended Video

ஹேஷ்டேக்
ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி #SuperstarRajinikanth , #HBDSuperstarRajinikanth ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரென்டாகி வருகின்றன. அவரது ட்விட்டரில் அண்ணா நீங்கள் ரஜினி ரசிகரா என கேட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் உங்கள் அன்பை நாங்கள் 1000 மடங்கு திரும்ப வெளிப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்கள்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications