Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெட் ஏர்வேஸ் பைலட் இனவெறி பேச்சு.. ஹர்பஜன்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜெட் ஏர்வேஸ் பைலட் இன வெறியுடன் நடந்து கொண்டதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

Harbhajan Singh lashed out at Jet Airways pilot

இதுதொடர்பாக பலவேறு டிவிட்டுகளை அவர் வெளியிட்டுள்ளார். அவற்றில் ஹர்பஜன்சிங் கூறியுள்ளதை பாருங்கள்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 'சோ கால்டு' பைலட் பெர்ன்ட் ஹோஸ்லின் என்பவர், என் சக இந்தியரை பார்த்து, 'இந்தியனே, என் விமானத்தை விட்டு வெளியேறு' என்றார். அவர் இனவெறி ரீதியில் மட்டும் பேசவில்லை, ஒரு பெண் பயணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆணை உடல் ரீதியாகவும் தாக்கினாரர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இதற்காக அவமானப்பட வேண்டும். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதைப் போன்ற நடவடிக்கைகள் என் நாட்டில் அனுமதிக்கப்படக் கூடாது. இவ்வாறு டிவிட்டுகளில் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவரும் ஹர்பஜன்சிங் தற்போது உள்நாட்டில் பல நகரங்களுக்கும் விமானத்தில் பயணித்து வருகிறார். ஆனால், எந்த விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது என்பதை டிவிட்டில் ஹர்பஜன்சிங் குறிப்பிடவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+