சச்சின் தம்பதி வாழ்த்துடன் இனிதே முடிந்தது ஹர்பஜன்சிங்-கீதா திருமணம்! நவ.1ல் கோலாகல ரிசப்ஷன்
ஜலந்தர்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கும் (35), அவரது நீண்டகால தோழியும், பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம் பக்வாரா நகரில் இன்று திருமணம் நடைபெற்றது.
முன்னதாக நேற்று, புதன்கிழமை மாலை ஜலந்தரில் பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அதைத் தொடர்ந்து மெஹந்தி மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்று ஜலந்தரிலுள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா ஒன்றில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஹர்பஜன்சிங் வெள்ளை நிற ஷெர்வானியும், சிவப்பு நிற டர்பனும் அணிந்திருந்தார். வழக்கமாக அணியும் டர்பனில் இருந்து இது மாறுபட்டதாக இருந்தது (சித்து அணிவதை போன்றது). கீதா பாரம்பரியம்மிக்க சிவப்பு மற்றும் தங்க வர்ண ஆடை அணிந்திருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி உட்பட மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஹர்பஜன் வீட்டில் வைத்து, மெகந்தி மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நவம்பர் 1ம் தேதி டெல்லியில் வைத்து பிரமாண்ட ரிசப்ஷன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஹர்பஜன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவராஜ்சிங், விராட் கோஹ்லி உள்ளிட்ட அணி வீரர்கள் மட்டுமின்றி, அமிதாப்பச்சன், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications