மாநிலங்கள் தோறும் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கும் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள 100 நாள் செயல் திட்டத்தில் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக கூறினார்.
அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் கடிதம் எழுதவிருப்பதாக ஹர்ஷவர்த்தன் குறிப்பிட்டார்.
உயர் மருத்துவ சிகிச்சை பெற குடிமக்கள் டெல்லிக்கு வரும் நிலை கூடாது என்றும், ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் அருகிலேயே தரமான சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications