ஹரியானாவில் தலித் குடும்பத்திற்கு தீ வைத்ததில் 2 குழந்தைகள் உடல் கருகி பலி
சன்டிகர்: ஹரியானா மாநிலத்தில் தலித் குடும்பம் வசித்த வீட்டிற்கு உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் தீ வைத்ததில் 2 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் சன்பெத் கிராமத்தில் வசித்து வரும் தலித் குடும்பத்தின் வீட்டின் மீது உயர் சாதியான ராஜ்புட் சாதியைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமை இரவு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் அந்த தலித் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களின் இரண்டரை வயது மகள் மற்றும் ஒன்பது மாத ஆண் குழந்தை உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் கடந்த மாதம் நடந்த கொலையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது தீ வைத்து எரிக்கப்பட்ட வீட்டினரின் பெயர் அந்த கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்டது. தீ வைத்தவர்கள் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் ஆக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அதனால் இந்த சம்பவம் பழிக்குப்பழியாக நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications