அரியணை ஏறும் காங்கிரஸ்.. ஹரியானாவில் பாஜகவுக்கு தோல்வி உறுதி.. சர்வே சொன்ன 3 மேஜர் காரணம்!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது. இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி 58 முதல் 65 இடங்கள் வரை வென்று ஹரியானாவில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என Lok Poll தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 3 முக்கிய விஷயங்கள் கைக்கொடுப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் அதன் விபரம் வருமாறு:
ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக நவாப் சிங் சைனி உள்ளார். இந்த நிலையில் ஹரியானா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் என்பது விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனால் தற்போது ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கான தேதி என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் என்பது செப்டம்பர் மாதம் 5ம் தேதி தொடங்க உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஹரியானாவை பொறுத்தவரை மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கு ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக முயன்று வரும் நிலையில் அரியணை ஏற காங்கிரஸ் துடிக்கிறது.
இந்நிலையில் தான் கடந்த லோக்போல் (LokPoll) சார்பில் ஹரியானா சட்டசபை தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை இந்த கருத்து கணிப்பு நடந்தது. மொத்தம் 67,500 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. இதன்மூலம் ஹரியானாவில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காங்கிரஸ் கட்சி 46 முதல் 48 சதவீத ஓட்டுகளுடன் 58 முதல் 65 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக 25 முதல் 37 சதவீத ஓட்டுகளுடன் 20 மதல் 29 தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 7 முதல் 8 சதவீத ஓட்டுகள் பெற்று குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சமாக 5 இடங்களில் வெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவால் காங்கிரஸ் கட்சி உற்சாகமடைந்துள்ளது.
மேலும் இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 3 முக்கிய விஷயங்கள் கைக்கெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது விஷயம் என்னவென்றால் அது அங்கு வசிக்கும் பெரும்பான்மையான சாதி மக்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் இருப்பதாகும். ஜாட், ஜாட் சீக்கியர்கள், ஜாதவ் உள்ளிட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பாஜகவை விட காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கி உள்ளது.
2வது விஷயம் என்னவென்றால் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. இதனால் அங்கு பாஜக மீது அதிருப்தி அலை உள்ளது. கடந்த ஓராண்டில் பாஜகவில் நடந்த மாற்றம் மற்றும் பாஜகவின் செயல்பாடு உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதவிர மனோகர் லால் கட்டாரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி நவாப் சிங் சைனியை முதல்வராக்கியதும் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது பாஜகவுக்கு பின்னடைவாகவும், காங்கிரஸ் கட்சிக்கு பலமாகவும் மாறி உள்ளது.
3வது விஷயம் என்னவென்றால் அது வேலைவாய்ப்பு. ஹரியானாவிலும் இளைஞர்கள் வேலையில்லாத திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். பொதுவாக நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால் இந்த முறை போதிய வேலை வாய்ப்பு உருவாக்காததால் நகர்புறங்களில் உள்ள இளைஞர்கள் பாஜகவுக்கு பதில் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ் பாயிண்டாகவும், பாஜகவுக்கு மைனஸாகவும் அமைந்துள்ளதாக லோக்போல் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2019 தேர்தலில் இந்த மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 40 இடங்களில் பாஜக வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வென்றது. ஜேஜேபி கட்சி 10, ஐஎன்எல்டி, எச்எல்பி கட்சிகள் தலா ஒன்று, சுயேச்சைகள் 7 இடங்களில் வென்றனர். இதையடுத்து பாஜக சுயேச்சைகள் உதவியுடன் ஆட்சியை பிடித்தது. பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராக செயல்பட்டு வந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு மனோகர் லால் கட்டாருக்கு பதில் நயாப் சிங் சைனி முதல்வரானார். தற்போது மனேகர் லால் கட்டார் பாஜக எம்பியாகி மத்திய அமைச்சராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!












Click it and Unblock the Notifications