ஹரியானா சட்டசபை தேர்தல்.. 90 தொகுதிகளிலும் மந்தமான வாக்குப்பதிவு.. 61.6% வாக்குகள் பதிவு!
Recommended Video
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் மிகவும் மந்தமாக நடந்து முடிந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 51 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்தது. இதில் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் அதிக கவனம் ஈர்க்கிறது.
டெல்லிக்கு மிக அருகில் இருக்கும் மாநிலம் என்பதால் தேசிய கட்சிகள் இந்த தேர்தல் மீது அதிக கவனம் செலுத்துகிறது.ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.

தேர்தல் இல்லை
ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் இருக்கிறது. 7 மணிக்கு தொடங்கும் தேர்தல் மாலை 6 மணிக்கு முடிந்தது. இங்கு பாஜகதான் ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேதான் பிரதான போட்டியாகும்.

எத்தனை பேர்
இந்திய தேசிய லோக் தள், ஆம் ஆத்மி மற்றும் ஸ்வராஜ் இந்தியா கட்சி, ஜேஜேபி, பிஎஸ்பி, எல்ஜேபி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. மொத்தம் 1169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2014 இங்கு நடந்த தேர்தலில் 47 சட்டசபை தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

திட்டம்
அப்போது காங்கிரஸ் 15 இடங்களையும் ஐஎன்எல்டி 19 இடங்களையும், பகுஜன் சமாஜ் ஒரு இடத்திலும் வென்றது. மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமான முயன்று வருகிறது. காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது.

எத்தனை பேர்
மொத்தம் 85 லட்சம் பெண்கள் உட்பட 1.83 கோடி பேர் இந்த தேர்தலில் ஹரியானாவில் வாக்களிக்கிறார்கள். மொத்தம் 19578 வாக்குச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3237 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் பணிகள்
3.8 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியை செய்து வருகிறார்கள். 75000 பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேர்தல் முடிவுகள் வரும் 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

எவ்வளவு பதிவானது
ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. காலையில் இருந்து மாலை வரை வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக சென்றது. மொத்தம் 61.62% வாக்குகள் மட்டுமே தேர்தலில் பதிவானது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications