ஹரியானா முதல்வர் ஹூடாவுக்கு 'பளார்' கொடுத்த வாலிபர்... வேலை கிடைக்காத விரக்தியில்!

Subscribe to Oneindia Tamil

Haryana Chief Minister Bhupinder Singh Hooda slapped at road show
பானிபட்: ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை, ஒரு இளைஞர் பளார் என அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு வேலை கிடைக்காத விரக்தியில்தான், கோபத்தில்தான் ஹூடாவைத் தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.

பானிப்பட்டில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. ஹூடா ஒரு திறந்த ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் திடீரென பாய்ந்து ஹூடாவை அடித்தார். அவரது கழுத்தில் அடி விழுந்தது. இதையடுத்து பாதுகாவலர்கள் அந்த நபரை அப்படியே பிடித்து அப்புறப்படுத்தினர்.

ஹூடாவைத் தாக்கிய நபரைப் பின்னர் போலீஸார் கைது செய்தனர். அவரது பெயர் கமல் முகிஜா என்றும், பானிப்பட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. வேலை தேடி வரும் இளைஞர் அவர். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இந்த கோபத்தில்தான் அவர் ஹூடாவைத் தாக்கியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+