ஓய்வுபெற்ற ராணுவ பெண் மருத்துவர் மீது மோதிய முன்னாள் தலைமை செயலர் கார்.. ஹரியானாவில் கொந்தளிப்பு!!
சண்டிகர்: ஓய்வுபெற்ற 90 வயது ராணுவ பெண் மருத்துவர் மீது ஹரியானா முன்னாள் தலைமைச் செயலர் அனில்குமார் கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அந்த மூதாட்டியை கண்டு கொள்ளாமல் தியேட்டரில் குடும்பத்துடன் போய் தலைமை செயலர் அனில்குமார் படம் பார்த்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த கோவிந்த்சிங் டனோவா என்ற இளைஞர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த 26-ந் தேதியன்று ஒரு பதிவிட்டிருந்தார். அதில், தன்னுடைய பாட்டி கேப்டன் டாக்டர் பி.கே. டனோவா(1962ஆம் ஆண்டு போரில் பங்கேற்றவர்) மீது சண்டிகர் தாகூர் தியேட்டர் வளாகத்தில் முன்னாள் தலைமைச் செயலர் அனில்குமாரின் அரசு வாகனம் மோதியது.
The Top Story #FrontPage #News #India :
https://t.co/xzXFdiENez
The Full Story #Facebook :
https://t.co/YMg6vmFkxm pic.twitter.com/roQuOD3FPp
— Gobind Singh Dhanoa (@gsdhanoa) September 27, 2015 இதில் நிலைகுலைந்த அவர் படுகாயமடைந்தார். ஆனால் என்னுடைய டிரைவர் தவறு செய்துவிட்டார்.. என்று கூறி சட்டென அந்த இடத்தை விட்டு நகர்ந்து குடும்பத்துடன் தியேட்டருக்குள் சினிமா பார்க்க நுழைந்துவிட்டார் அனில்குமார். என்னுடைய பாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவோ அல்லது உதவி செய்யவோ அவர் பொறுத்திருக்கவில்லை. இந்த நாட்டின் மூத்த குடிமக்களை வி.ஐ.பி.க்கள், அதிகாரவர்க்கம் இப்படித்தான் நடத்துமா?
இது பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்றடைய வேண்டும் என்று கொந்தளிப்புடன் ஒரு பதிவைப் போட்டார். அவ்வளவுதான் மக்கள் கொந்தளித்துவிட்டார்கள்.. 2,670 பேர் இதை ஷேர் செய்து ஃபேஸ்புக்கில் போட ஹரியானா மாநிலமே கொந்தளித்தது.
ஏற்கெனவே ஓய்வு பெற்ற ராணுவத்தினர் ஒரே பதவி... ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையில் மத்திய அரசு மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வி.ஐ.பி.க்கள் இப்படித்தான் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை நடத்துவதா? என்ற கோபமும் இணைந்து கொண்டிருக்கிறது.
ஊடகங்களும் இந்த சம்பவத்தை விவாதப் பொருளாக்கி இருக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications