வதேராவின் "நிலக் கொள்ளை": நீதிபதி திங்ரா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தது ஹரியானா!
சண்டிகர்: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என். திங்ரா தலைமையில் கமிஷனை அமைத்து ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் ஏராளமான அரசு மற்றும் விவசாய நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார். இந்த மாநிலங்களில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் துணை கொண்டு அவரால் பல நூறு ஏக்கர் நிலங்களை வளைக்க முடிந்தது.

ராபர்ட் வதேரா தாம் வாங்கிய நிலங்களை டி.எல்.எப். உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் விலைக்கு விற்றுள்ளார். இந்த நில பேரங்களில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலக் கொள்ளையை முதன் முதலில் அம்பலப்படுத்தியவர் அசோக் கெம்கா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிதான்.
இது அரசியலில் பெரும் புயலை வீசிக் கொண்டிருந்தது. ஹரியானா சட்டசபை தேர்தலில் இந்த விவகாரத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வதேராவின் நிலக் கொள்ளை குறித்து விசாரணை நடத்துவோம் என்றும் பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.
ஹரியானா தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய நாள்முதலே வதேராவின் நிலக்கொள்ளை குறித்து விசாரணை நடத்துவோம் என்றும் அக்கட்சி கூறி வந்தது. இந்நிலையில் வதேராவின் நிலக் கொள்ளை குறித்து விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி திங்ரா தலைமையில் கமிஷனை அமைத்து ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ராபர்ட் வதேரா எங்கெங்கு நிலம் வாங்கி மோசடி செய்தார் என்பதை இந்த விசாரணைக் கமிஷன் முழுமையாக விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications