For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹரியானா இழுபறி.. அனைத்து அலுவல்களையும் ரத்து செய்த அமித் ஷா.. பாஜக ஆபீஸ் விரைகிறார்.. அடுத்து என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    Haryana assembly elections 2019 | BJP leading | ஹரியானா சட்டசபை தேர்தல்.. பாஜக அதிரடி முன்னிலை

    டெல்லி: ஹரியானா மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால், அமித் ஷா தனது அனைத்து அலுவல்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் விரைகிறார்.

    ஹரியானா, மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அங்குள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    தற்போதைய டிரெண்ட்படி, பாஜக 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. புதிதாக உருவான ஜனநாயக் ஜனதா கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்று கிங் மேக்கராக மாறியுள்ளது.

    பஞ்சாப் இடைத் தேர்தலில் பட்டையை கிளப்பும் காங்கிரஸ்.. 3 தொகுதிகளில் முன்னிலை!பஞ்சாப் இடைத் தேர்தலில் பட்டையை கிளப்பும் காங்கிரஸ்.. 3 தொகுதிகளில் முன்னிலை!

    பெரும்பான்மை

    பெரும்பான்மை

    ஹரியானாவில் பெரும்பான்மை நிரூபிப்பதற்கு 46 இடங்களை வெல்ல வேண்டியது கட்டாயம். எனவே அங்கு தொங்கு சட்டசபை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

    பாஜக முயற்சி

    பாஜக முயற்சி

    இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான வியூகங்களை எடுக்க தொடங்கியுள்ளது.

    அமித் ஷா அதிரடி

    அமித் ஷா அதிரடி

    எனவே பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஏற்கனவே திட்டமிட்ட தனது அனைத்து அலுவல்களையும் ரத்து செய்துவிட்டு இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் விரைகிறார்.

    மனோகர் லால் கட்டாருக்கு அழைப்பு

    மனோகர் லால் கட்டாருக்கு அழைப்பு

    ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் டெல்லிக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் அமித்ஷா. அவர் எடுக்க உள்ள அடுத்த கட்ட வியூகம் என்னவாக இருக்கும் என்பது தொடர்பாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    English summary
    BJP president and Home Minister Amit Shah has cancelled his pre-schedule ITBP function in Greater Noida to follow the assembly election results closely.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X