Haryana Lok Sabha Election Results LIVE: டையில் முடிந்தது.. பாஜக, காங்கிரஸ் தலா 5 இடங்களில் வெற்றி
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் பாஜக 5 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் பாஜக இடையிலான போட்டி டையில் முடிந்துள்ளது.
தலைநகர் டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலம் ஹரியானா. கடந்த 1966, நவம்பர் 1ம் தேதி ஹரியானா என்ற பெயரில் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. பஞ்சாப் மாகாணத்தோடு ஹரியானா இணைக்கப்பட்டாலும், தாய்மொழி, கலாச்சாரம் வேறு என்பதால், பின்னர் அது தனி மாநிலமாக உருவானது.

ஹரியனாவில் 10 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஹரியானாவில் தற்போது பாஜகவைச் சேர்ந்த நயாப் சிங் சைனி முதல்வராக இருக்கிறார். ஹரியானாவில் 40-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனாலும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி ஆகிய 4 கட்சிகளே மாநிலத்தின் முக்கிய கட்சிகளாக உள்ளன.
ஹரியானாவின் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஹரியானாவில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டுள்ளது. இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்று வருகிறது. ஹரியானாவில் தற்போதைய நிலவரப்படி (மதியம் 1 மணி)காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாஜக 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இறுதியிலும் இதே நிலை தான் நீடித்தது. அதாவது ஹரியானாவில் பாஜக 5 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள்:
* அம்பாலா
* சிர்சா,
* ஹிசார்,
* ரோஹ்தக்,
* குர்கான்
பாஜக வெற்றி பெற்ற தொகுதிகள்:
* குருஷேத்ரா
* கர்னால்
* சோனிபட்
* பிவானி மகேந்திரகர்
* பரிதாபாத்
முக்கிய வேட்பாளர்கள்: ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியில் பாஜக சார்பில் நவீன் ஜிண்டால் வெற்றி பெற்று உள்ளார். பெரும் தொழிலதிபரான நவீன் ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் தான் விலகி பாஜகவில் இணைந்தார்.
இதனால், குருஷேத்ரா தொகுதி முடிவு நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் சுஷில் குப்தா போட்டியிட்டார். இந்திய தேசிய லோக் தள் கட்சி சார்பாக அபய் சவுதாலா போட்டியிட்டுள்ளார்.
மனோகர் லால் கட்டார்: கர்னால் தொகுதியில் பாஜக சர்பாக முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து ஹரியானா காங்கிரஸ்சின் இளைஞர் காங்கிரஸ் தலைவர் திவ்யன்ஷு புதிராஜா களத்தில் உள்ளார். வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜகவின் மனோகர் லால் கட்டார் 7,39,285 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளரை விட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மனோகர் லால் கட்டார் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிலையில், வேட்பாளராக போட்டியிட்டு இருப்பதால் இந்த தொகுதி மிகுந்த கவனம் பெற்று இருந்தது.












Click it and Unblock the Notifications