மத்திய அரசு மார்தட்டியது போல பணமதிப்பிழப்பு நடவடிக்கை நக்சல்களை முடக்கவில்லையே!
மத்திய அரசு மார்தட்டியது போல பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது நக்சல்களை முடக்கவில்லை என்பதையே சத்தீஸ்கர் தாக்குதல் வெளிப்படுத்துகிறது.
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நக்சல்கள் பணமில்லாமல் முடங்கிப்போனதாக மத்திய அரசு மார்தட்டிய சில மாதங்களிலேயே மிக கொடூரமான தாக்குதல் சத்தீஸ்கரில் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் மத்திய அரசின் மிதமிஞ்சிய நம்பிக்கையின் மீது விழுந்த சம்மட்டி அடியாகத்தான் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கருப்பு பணத்தை மட்டுமின்றி பயங்கரவாதத்தையும் ஒழித்து கட்டிவிட்டோம் என பெருமிதப்பட்டுக் கொண்டது மத்திய அரசு.

மேலும் கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பின் மூலம் தாங்கள் பதுக்கி வைத்த பணத்தை மாற்ற வழியில்லாமல் நக்சல்கள் தவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் நக்சலைட்டுகள் முடங்கிப் போய்விட்டனர். இது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என கூப்பாடு போட்டார்.
ஆனால் நக்சல்கள் சத்தீஸ்கரில் உக்கிர தாக்குதலை நடத்தி 26 பாதுகாப்பு படையினரை படுகொலை செய்துள்ளனர். அத்துடன் ராணுவ வீரர்களின் உடல்களையும் சித்திரவதை செய்துள்ளனர். பணமதிப்பிழப்புக்குப் பின்னரும் நக்சலைட்டுகளுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது?
நக்சல்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் கிடைத்திருக்க வேண்டும்; அதேபோல் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்கிறது உளவுத்துறை வட்டாரங்கள். மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ் உளவு அமைப்பு மூலமாக ஆயுதங்களை நக்சல்கள் கொள்முதல் செய்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
ஆகையால் பணமதிப்பிழப்பு மூலம் சாதித்துவிட்டோம் என பெருமிதம் பேசியதை மத்திய அரசு தவறு என உணரவேண்டும். அத்துடன் நக்சல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் தோல்வியைத் தந்திருக்கின்றன என்பதையும் உணரவேண்டிய தருணம் இது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications