சசிகலா அணிக்கு தொப்பி ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணிக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு வேட்பாளரான டிடிவி.தினகரன் தொப்பி சின்னத்திலேயே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா தரப்பு அதிமுகவுக்கு முன்னதாக ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த சசிகலா தரப்பு தொப்பி சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு கோரியது.

இதையடுத்து தொப்பி சின்னத்தை சசிகலா தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சசிகலா தரப்பு வேட்பாளரான டிடிவி.தினகரன் தொப்பி சின்னத்திலேயே போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications