ஷீனாவே வெறுத்தேன், ஆனால் கொல்லவில்லை.. சொல்கிறார் இந்திராணி
மும்பை: ஷீனா போராவை நான் வெறுத்தது உண்மைதான். ஆனால் கொலை செய்யவில்லை என்று கூறியுள்ளாராம் இந்திராணி முகர்ஜி.
தன்னிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளிடம் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளாராம் இந்திராணி போரா. மேலும் ஷீனாவைக் கொலை செய்தது தனது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாதான் என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளாராம்.
சனிக்கிழமை இவர்கள் இருவரையும் வைத்து மாறி மாறி விசாரணை நடத்தியுள்ளனர் போலீஸார். இருவரையும் ஒன்றாக அமர வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டிக் கொண்டார்களாம்.

வெறுத்தேன், கொல்லவில்லை
போலீஸாரிடம் இந்திராணி கூறுகையில், நான் எனது மகளை வெறுத்தேன். அது உண்மைதான். ஆனால் கொலை செய்யவில்லை. அதைச் செய்தது சஞ்சீவ் கன்னாதான் என்று கூறினாராம்.

பணம் தருவதாக கூறினார் இந்திராணி
சஞ்சீவ் கன்னா போலீஸாரிடம் கூறுகையில், இந்த வழக்கில் என்னை இழுத்து விட்டதே இந்திராணிதான். அவர்தான் எனக்கு பண உதவி செய்வதாக ஆசை காட்டினார். அதனால்தான் இதில் நான் தலையிட்டேன்.

மோசமான உறவுகள், நம்பிக்கையின்மை
இந்த விசாரணை மூலம் இந்திராணிக்கும், அவரது பிள்ளைகளான ஷீனா, மிக்கியல் போராவுக்கும் இடையே உறவு சரியில்லை என்பதும், கோபம், நம்பிக்கையின்மை இரு பக்கத்திலும் இருந்தது என்பதும் போலீஸாருக்குத் தெளிவாகியுள்ளது.

மகனை மன நல காப்பகத்தில் சேர்த்த இந்திராணி
நேற்று ஒரு ஹோட்டலில் வைத்து இந்திராணியின் மகன் மிக்கயிலிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது தன்னை இந்திராணி, புனேவில் உள்ள ஒரு மன நல காப்பகத்தில் சில மாத காலம் சேர்த்து விட்டார் என்று கூறியுள்ளார் மிக்கயில்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications