ரூ.100 கோடி சொத்து! 21 ஏக்கரில் பங்களா! 'போலே பாபா'வின் அண்டர் கிரெளண்ட் சாம்ராஜ்ஜியம்!
ஹத்ராஸ்: சர்ச்சையில் சிக்கியுள்ள போலே பாபாவுக்குக் கிட்டத்தட்ட உபி முழுவதும் 24 ஆசிரமங்கள் உள்ளன என்றும் அவருக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக விழாவில் கலந்து கொண்டவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சுமார் இதுவரை 122 பேர் பலியாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட போலே பாபா தலைமறைவாகிவிட்டார் என அம்மாநில காவல்துறை கூறியுள்ளனர்.

ஆனால், அவர் இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சாமியார், 'இது சமூக விரோதிகளின் சதி’ என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த அறிக்கையில் அவரது கையெழுத்தே இல்லை என்று மற்றொரு தரப்பு புகார் கூறியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் 24 பேர் உள்ளதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.
இதனிடையே தப்பி ஓடிய போலே பாபா சாமியார் மீது ஏற்கனவே 5 பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஹத்ராஸ் நிகழ்வுக்கு முன் அனுமதி பெற்றே இந்த ஆன்மிக நிகழ்வு நடத்தப்பட்டது என்றும் ஆனால், எதிர்பார்த்ததைவிடக் கூட்டம் 2 மடங்கு அதிகரித்து விட்டதாகவும் ஆசிரம தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தப் போலே பாபாவின் உண்மையான பெயர் நாராயண் ஹரி சாகர். ஆனால் இவரது பக்தர்கள் சூரஜ் பால் என்றே இவரை அழைத்து வருகின்றனர். இந்நிலையில்தான் ஆசிரமங்கள், சொகுசு கார்கள் எனக் குறைந்தபட்சம் இவருக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 65 வயதான போலே பாபா தலைமறைவான பின்னர் அவரது முக்கிய உதவியாளர்கள் சிலர் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பற்றிய விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. பாலின் அறக்கட்டளை, ஸ்ரீ நாராயண் ஹரி சாகர் அறக்கட்டளை ஆகியவற்றைக் கைதானவர்கள்தான் நிர்வகித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சாமியாரின் பக்தர்கள் அதிகம் ஏழை எளிய மக்கள்தான். அப்படி இருக்கும் போது இந்தளவுக்குச் சாமியாரால் எப்படி சொத்து சேர்க்க முடிந்தது என்பது கேள்விக் குறியாக உள்ளது.
போலே பாபா தனது பக்தர்களுக்குக் காட்சி தருவதற்காக ஏற்பாடு செய்யப்படும் அனைத்து விழாக்களுமே மிகப் பிரமாண்டமாகவே நடத்தப்பட்டுள்ளன. அவர் அரங்கிற்குள் நுழைவதே தடபுடலாகவே இருக்கும். அவர் வழக்கமாக வெள்ளை உடைதான் அணிந்திருப்பார். ஆனால், மாடர்ன் ஆகக் கண்ணாடிகள் அணிந்திருப்பார். அவரது பாதுகாப்புக்காக 16 பவுன்சர்கள் எப்போதும் கறுப்பு உடையுடன் வலம் வருவார்கள். இவர்கள் அனைவரும் 350 சிசி மோட்டார் சைக்கிள் வைத்துள்ளனர்.
இந்த சாமியாரின் எஸ்கார்ட் 15 முதல் 30 வரை வாகனங்களில் முன்னே செல்வது வழக்கம். பாபா போகும் பாதையில் பாதுகாப்புக்களை உறுதி செய்த பின்பே அவர் பின்னால் வருவார். இவரது சேவகர்கள் இளஞ்சிவப்பு உடையில் இருப்பார்கள். பாபா ஒரு வெள்ளை டொயோட்டா ஃபார்ச்சூனரில் அவரே வண்டியை ஓட்டிக் கொண்டு வருவார். அந்த கார் மிக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
பிச்சுவாவில் அமைந்துள்ள மைன்புரி ஆசிரமத்தில்தான் பால் வசித்து வருகிறார். 21 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்து உள்ள இந்த ஆசிரமத்திற்கு ஹரி நகர் என்று பெயரிட்டார். இந்த விசாலமான எஸ்டேட்டில், இவருக்கும் அவரது மனைவிக்கும் பிரத்தியேகமாக ஆறு அறைகள் சில ஒதுக்கப்பட்டுள்ளன. அவரது மைன்புரி ஆசிரமத்தின் நுழைவாயிலில், குறைந்தபட்சம் ரூ. 10,000 முதல் அதிகபட்சம் ரூ. 2.5 லட்சம் வரை நன்கொடை அளித்த 200 பேர்கள் பதித்த ஒரு பலகை ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த பாபாவுக்கு மாநிலம் முழுக்க 24 ஆசிரமங்கள் உள்ளன. இந்த மைன்புரி ஆசிரமம் 3 ஆண்டுகள் முன்புதான் கட்டி முடிக்கப்பட்டது என அவரது பக்திகள் கூறுகின்றனர்.
கண்காணிப்பு கோபுரங்கள், உயரமான சுவர்கள், பிரமாண்டமான நுழைவு வாயில் என ஒரு கோட்டையைப் போல உள்ளது இந்த ஆசிரமம். பாபா பிறந்த பாட்டியால் என்று ஊரில்தான். ஆக, அங்கே ஒரு ஆசிரமமும் உள்ளது. அங்கே வீடியோ எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவின் கேதார் நகரில் பாபாவுக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. ஆனால், இவர் பல ஆண்டுகளாக அங்கே சென்றதில்லை. உ.பி.யில் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருந்த இவர் எப்படி ஒரு ஆன்மீக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அவரையும் அவரது ஆசிரமத்தையும் சுற்றி இருக்கும் ரகசியம் எப்போது விலகுமோ?
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications