மருத்துவர்களின் ஊழல்... சாய்பாபா டிரஸ்டுக்கு மும்பை ஹைகோர்ட் நோட்டீஸ்
மும்பை: சீரடியில் உள்ள சாய்பாபா சந்நிதான டிரஸ்டுக்கு மும்பை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிரஸ்டுக்கு சொந்தமான மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் இரண்டு மருத்துவர்கள் முறைகேடு செய்த விவகாரம் தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
அந்த மருத்துவமனையில் உள்ள இரண்டு இருதவியல் மருத்துவர்களின் மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த நோட்டீஸை நீதிபதிகள் இந்திரா ஜெயின் மற்றும் நல்வாடே ஆகியோர் அடங்கிய ஒளரங்காபாத் பெஞ்ச் பிறப்பித்துள்ளது. டிரஸ்ட், சீரடி போலீஸ் நிலையம், எஸ்.பி. அலுவலகம் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்ட்டுள்ளது. ஜூன் 24ம் தேதி க்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விசாரணை தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கும் பெஞ்ச் உத்தரவிட்டது.
முன்னதாக சஞ்சய் காலே என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், டிரஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றும் இரண்டு மருத்தவர்கள் பெருமளவிலான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். ஏழைகளுக்காக நிறுவப்பட்ட மருத்துவமனையை இவர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
டென்ட், பலூன்கள், சாதனங்கள் உள்ளிட்டவற்றை வாங்க பல்வேரு நிறுவனங்களிடமிருந்து கமிஷன் பெற்று அவர்களுக்குச் சாதகமாக நடந்துள்ளனர்.
மேலும் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி தரக் குறைவான பொருட்களை மருத்துவமநை நிர்வாகம் வாங்க வழி செய்துள்ளனர். இதனால் இவர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சீரடி சாய்பாபாடிரஸ்ட்டும் இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர்களும் பதில் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக நாங்கள் பலமுறை அறக்கட்டளையிடம் புகார் கொடுத்தும் இதுவரை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications