தயாரிப்பாளர் மகளை மணக்கிறார் "குமாரசாமி" மகன்.. ஆனால் இவர் "அவர்" அல்ல...!
பெங்களூரு: குமாரசாமி மகனுக்கும், சினிமாத் தயாரிப்பாளர் மகளுக்கும் திருமணம் நடக்கப் போகிறது. குமாரசாமி என்றதும் பலருக்கும் "அவர்" நினைவுதான் வரும்.. ஆனால் இவர் அவர் அல்ல.. இந்த குமாரசாமி, கர்நாடக முன்னாள் முதல்வர். அவரது மகனும், நடிகராக அவதாரம் எடுக்கவுள்ளவருமான நிகில் கெளடாவுக்கும், தயாரிப்பாளர் மோகனின் மகள் ஸ்வாதிக்கும் திருமணம் பேசி முடித்துள்ளனர்.

தேவெ கெளடாவின் பேரனும், குமாரசாமியின் மகனுமான நிகில் கெளடாவும் இப்போது நடிகராகப் போகிறார். விரைவில் அவரது புதிய படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அவருக்கு கல்யாணத்தை நடத்த முடிவு செய்து பெண்ணும் பார்த்து முடிவு செய்து விட்டனர். சினிமா குடும்பத்தில்தான் சம்பந்தம் பேசியுள்ளனர்.
பெண்ணின் பெயர் ஸ்வாதி. தயாரிப்பாளர் கே.சி.என் மோகன்- பூர்ணிமா மோகன் தம்பதியின் மகள்.
இது காதல் திருமணம். 2 வருடங்களுக்கு முன்பு எம்.பி.ஏ படித்தபோது இருவரும் சந்தித்துக் கொண்டனர்.. அப்படியே சிந்திக்கவும் செய்தனர்.. காதல் மலர்ந்து வளர்ந்தது... இப்போது திருமணத்தில் முடியப் போகிறது.

சில வாரங்களுக்கு முன்புதான் குமாரசாமியின் அண்ணன் பாலகிருஷ்ண கெளடாவின் மகனுக்குத் திருமணம் நடந்தது. அடுத்த மாதம் கெளடா குடும்பத்தில் இன்னொரு திருமணம் நடைபெறவுள்ளது. எனவே உடனடியாக நிகில் திருமணம் இருக்காது என்கிறார்கள். சில மாதங்கள் கழித்தே நடக்கும் என்றும் தெரிகிறது.
கே.சி.என் குடும்பம் என்றால் கன்னடத் திரையுலகில் தெரியாதவர்களே கிடையாது. அப்படி ஒரு பாரம்பரியமான சினிமாக் குடும்பம். மோகன் அவரது சகோதரர் சந்திரசேகர் ஆகியோர் தங்களது தந்தை கே.சி.என். கெளடா வழியில் தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள்.
குமாரசாமி குடும்பமும் சினிமா சம்பந்தப்பட்டதுதான். குமாரசாமியே கூட ஆரம்பத்தில் திரைப்பட தயாரிப்பாளராகத்தான் இருந்தார். ஐந்து படங்கள் தயாரித்துள்ளார். பிறகுதான் அவர் முழு நேர அரசியல்வாதியானார். முதல்வரானார்.
மகன் நிகிலை நடிகராகவும் குமாரசாமி அறிமுகப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications