என் இடுப்பில் கையை வைத்ததால் காங். எம்.எல்.ஏ.வை கடித்தேன்: பெண் எம்.எல்.ஏ. பேட்டி
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவதாசன் நாயரை கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் கடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை கேரள நிதி அமைச்சர் கே.எம். மணி தாக்கல் செய்தார். அப்போது எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜமீலா பிரகாசம் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான கே. சிவதாசன் நாயரை கடித்துவிட்டார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
நான் முதல்வர் உம்மன் சாண்டியை பாதுகாக்க அவர் அருகில் நின்று கொண்டிருந்தபோது ஜமீலா திடீர் என என்னை கடித்துவிட்டார் என்று சிவதாசன் நாயர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றி ஜமீலா கூறுகையில்,
எம்.எல்.ஏ. தனது ஒரு கையால் பின்னால் இருந்து என் கையை முறுக்கினார். மறுகையை என் இடுப்பில் வைத்தார். அவர் முழங்காலால் பின்னால் இருந்து என்னை எத்தினார். திரும்பிப் பார்த்தால் அது சிவதாசன் நாயர். என்னை விட்டுவிடுங்கள் இல்லை என்றால் கடித்து விடுவேன் என்றேன். அவர் தான் முடிந்தால் கடித்துப் பாருங்கள் என்றார். அதனால் தான் கடித்தேன். நான் முதல்வரை தொடக் கூட இல்லை என்றார்.
சட்டசபையில் நடந்த சம்பவம் குறித்து ஜமீலா சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications