19-ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு திரண்டு வாருங்கள்.. பக்தர்களுக்கு ரமண தீட்சதலு பரபரப்பு அழைப்பு
19 -ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வர வேண்டும் என தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video

திருப்பதி: 19-ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் திரண்டு வர வேண்டும் என தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி கோயில் மடப்பள்ளியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
அர்ச்சகர்களை ஆகம விதிப்படி பூஜைகள் செய்ய அதிகாரிகள் விடுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அனுமதியில்லை
சில அரசியல்வாதிகளுடன் அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு புதையல் தோண்டும் பணியில் ஈடுபடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
திருப்பதி கோயிலில் காலங்காலமாக பெருமாளுக்கு அணிவித்து வந்த காசு மாலை உள்ளிட்ட பல்வேறு நகைகளை காணவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நகைகள் மாயம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை எழுப்ப தலைமை அர்ச்சகர் திட்டமிட்டுள்ளார்.

புதையலை எடுக்க
இந்நிலையில் இதுகுறித்த ரமண தீட்சதலு கூறுகையில் புதையலை எடுப்பதற்காகவே கோயிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது இந்துக்களுக்கு எதிரானது.

திரண்டு வாருங்கள்
எனவே நகைகள் மாயம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வரும் 19-ஆம் தேதி விசாரணை நடைபெறுவதால்பக்தர்கள் அனைவரும் அன்றைய தினம் திருப்பதி கோயிலுக்கு வருமாறு அர்ச்சகர் ரமண தீட்சதலு பரபரப்பு அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications