காவிரி வழக்கு: இறுதிக்கட்ட விசாரணை மார்ச் 21 முதல் ஏப்.11 வரை நடைபெறும் - சுப்ரீம் கோர்ட்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளின் மீதான விசாரணை மார்ச் 21 முதல் ஏப்ரல் 11ஆம் தேதிவரை நடைபெறும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்
டெல்லி: காவிரியில் தமிழகத்திற்கு உரியளவு நீர் திறந்து விடுவதில் ஏற்பட்ட தாமதங்களால் கர்நாடகாவிடம் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளா தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவராய் கன்வில்கர் அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது.

காவிரி தொடர்பான வழக்கு இறுதிக்கட்ட விசாரணை மார்ச் 21 முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை வழக்கு விசாரணை தினமும் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
காவிரி நதிநீர் நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கடந்த 2007ஆம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றதில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த மனுக்களை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், காவிரி நதிநீர் பங்கீடு குறித்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தது. அத்துடன் கர்நாடக அரசு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பின்னர், ஜனவரி 4ஆம்தேதிக்கு ஒத்திவைத்து தொடர்ந்து தண்ணீர் திறக்கவும் உத்தரவிட்டனர். இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதி காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 67 சதவீதம் வறட்சி தமிழகத்தில் நிலவி வருவதாக தமிழக அரசு சார்பில் வாதாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கில் மறு உத்தரவு வரும்வரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற முந்தைய உத்தரவு தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிப்ரவரி 7ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும், ஒவ்வொரு தரப்பும் வாதத்தை முன்வைக்க ஏதுவாக 3 வாரம் அவகாசம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அப்போது, தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக கர்நாடகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு மீண்டும் நடுவர் மன்ற விசாரணைக்கு அனுப்பப்பட மாட்டாது என்று காவிரி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உறுதி அளித்துள்ளது. இதனிடையே காவிரி வழக்கு விசாரணை இன்று முதல் உச்சநீதிமன்றத்தில் துவங்கியது, நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவராய் கன்வில்கர் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே காவிரி வழக்கு விசாரணை இன்று முதல் உச்சநீதிமன்றத்தில் துவங்கியது, நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவராய் கன்வில்கர் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதியன்று ஒத்திவைத்த நீதிபதிகள், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்குகளின் மீதான இறுதிக்கட்ட விசாரணை மார்ச் 21 முதல் ஏப்ரல் 11ஆம் தேதிவரை நடைபெறும் என்று தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications