"கலங்கிடுச்சே".. ஒரே இடத்தில் "ஷூ காலால்" 3 முறை தாக்கி.. சி.எம். வரை போன மேட்டர்: "புல்டோசர் தண்டனை"
காதலியை கொடூரமாக தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்
போபால்: இளம்பெண் ஒருவரை அவரது காதலன் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியானது.. தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞர், காதலியை வற்புறுத்திய நிலையில், இக்கொடூர சம்பவமும் நடந்து, அது தொடர்பாக 2 பேர் கைதாகியும் உள்ளனர்.. அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையும் நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. 24 வயதாகிறது.. இவர் 19 வயதாகும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.. இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று ரேவாவின் மௌகஞ்ச் பகுதியில் அந்த பெண்ணை, இளைஞர் கடுமையாக தாக்கி உள்ளார்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் வெளியானது.. காதலியுடன் ஒன்றாக நடந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென அந்தப் பெண்ணை கன்னத்தில் அறைந்தார் இளைஞர்..

தலைமுடியை பிடித்து
பிறகு, கீழே தள்ளி காலால் அந்த பெண்ணை எட்டி எட்டி உதைத்தார்.. கண்மூடித்தனமாக தாக்குவதை தடுத்து நிறுத்தாமல், அந்த இளைஞனின் நண்பர் ஒருவர் இதை லைவ் வீடியோ எடுத்தார்.. கொடூர தாக்குதலில் அந்த பெண் சாலையோரத்தில் மயங்கி விழுந்தார்.. உடம்பெல்லாம் ரத்தம் வழிந்த நிலையில், மோசமான நிலையில் அந்த பெண் விழுந்து கிடப்பதை பார்த்து, பொதுமக்கள் சிலர் உடனடியாக போலீஸுக்கு தகவல் தந்தனர்.. போலீசார் விரைந்து வந்து, பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நடுரோட்டிலேயே
அந்த வீடியோவில், காதலர்கள் இருவரும் கைகளை பிடித்தபடி நடந்து வருகிறார்கள்.. அப்போதுதான் வாக்குவாதம் துவங்குகிறது.. பெண்ணின் குடும்பத்தார் திருமணத்திற்கு சம்மதிக்காததால் அந்த பெண் தன்னுடைய காதலை திருமணம் செய்ய மறுத்துள்ளார்... இதை கேட்டு அதிர்ந்த அந்த காதலன், பெண்ணை அறைந்து, அவருடைய தலைமுடியை பிடித்து, தரையில் கீழே தள்ளி தாக்குகிறார்... இரக்கமின்றி அந்த பெண்ணின் தலை மீது காலை வைத்து எட்டி எட்டி உதைக்கிறார்... முதலில் காலில் ஓங்கி உதைக்கிறார்.. அதற்கு பிறகுதான், ஷூ காலேயே 3,4 முறை எட்டி எட்டி, முகத்தில் உதைக்கிறார்.. முதல் முறை உதைக்கும்போதே, அந்த பெண் பேச்சுமூச்சின்றி ஆகிவிடுகிறார்.. அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பெண் மயக்கம் மயக்க நிலைக்கும் போய்விட்டார்.

கதிகலங்கிடுச்சே
இறுதியில்தான், நண்பர் இதை வீடியோ எடுத்து கொண்டிருப்பதை இளைஞர் கவனிக்கிறார்.. அதனால், வீடியோவை டெலிட் செய்யுமாறு நண்பரிடம் கேட்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது... அதற்கு பிறகு 2 நண்பர்களும் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டனர்.. அந்த பெண் பல மணி நேரமாக, சாலையில் மயக்க நிலையில் கிடந்துள்ளார்... இதனிடையே, அந்த தாக்குல் வீடியோ வெளியானதையடுத்து, வீடியோ எடுத்த நபர் மீது போலீஸில் புகார் தரப்பட்டது.. போலீசாரும் வீடியோ அடிப்படையில் வீடியோ எடுத்த நபர் மற்றும் அந்த கொடூர காதலன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ததுடன், வீடியோ எடுத்த நண்பரையும் கைது செய்தனர்.. ஆனால், அந்த கொடூர காதலன் தப்பியோடிய நிலையில், அவரையும் கைது செய்துவிட்டனர்,..

முறிந்த காதல்
இதுகுறித்து ரேவாவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் சொல்லும்போது, "அந்த இளைஞர் மௌகஞ்ச் நகரில் உள்ள தேரா கிராமத்தில் வசிப்பவர்... இளம்பெண் வேறு கிராமத்தை சேர்ந்தவர். இருவருக்கும் இடையே ஏதோ தகராறு ஏற்பட்டது. அந்த நபர் அந்த பெண்ணை தாக்கியுள்ளார். அந்த இடத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து வந்தோம். பின்னர், அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்" என்றார்.

டிரைவிங் லைசென்ஸ்
இந்த சம்பவம் நடந்தது பொதுவெளியில் என்பதால், மக்கள் நடமாட்டம் அங்கு அதிகமாகவே இருந்துள்ளது.. ஆனால், அந்த இளைஞரை ஒருத்தரும் சென்று தடுக்கவில்லையாம்.. தட்டி கேட்கவுமில்லையாம்.. இந்த வீடியோ வைரலானதையடுத்து, மத்தியப் பிரதேச போலீசாரே தாமாக முன்வந்துதான் இது தொடர்பான வழக்கை பதிவு செய்தது. அந்த இளைஞர் பெயர் பங்கஜ் திரிபாதி.. இவர் டிரைவர் வேலை பார்த்து வந்துள்ளார்.. பெண்ணை தாக்கியதுமே, அங்கிருந்து தப்பித்து உத்தரப்பிரதேசம் மிர்சாப்பூருக்கு வந்து பதுங்கியிருந்துள்ளார். ஆனால், போலீசார் தீவிர வேட்டையாடி இளைஞரை கைது செய்தனர்.

புல்டோசர் அட்டாக்
தொடர்ந்து அரசின் உத்தரவின்பேரில், ரேவாவில் உள்ள பங்கஜ்ஜின் வீட்டை மாவட்ட காவல்துறை நிர்வாகத்தினர் புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கினர்... அத்துடன், தன்னுடைய கடமையை செய்ய தவறியதாக மவ்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்வேதா மவ்ரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த "புல்டோசர் தண்டனை" தொடர்பாக மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் ட்வீட் செய்து அறிவித்திருக்கிறார்.. அவர் தன்னுடைய பதிவில், "பெண்களுக்கு எதிராக மத்தியப்பிரதேசத்தில் யார் குற்றம் செய்தாலும் அவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. குற்றவாளியின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது. அவரது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது" என்று கூறியுள்ளார்.

புல்டோசர் தண்டனை
பொதுவாக, குற்ற சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு புல்டோசர் தண்டனையை முதன்முதலில் வழங்கியதே உத்தரப்பிரதேசத்தின் யோகி அரசுதான்.. யோகியின் இந்த தண்டனையானது, மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்க துவங்கி உள்ளது.. மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களும் இதே புல்டோசர் தண்டனைகளை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது... எனினும், இதன்மூலமாகவாவது வன்முறை குற்றங்கள் குறைந்துள்ளதா என்று கேட்டால், "இல்லை" என்றே சொல்ல வேண்டி உள்ளது.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications