போயும் போயும்.. பஸ்ஸூக்குள்ளேயே.. அதுவும் சீட்டுக்கு அடியில்.. ஆமா, அதென்ன வயிறு பெரிசா இருக்கே..?
பஸ்ஸுக்குள்ளேயே ஹாயாக படுத்து ரெஸ்ட் எடுத்துள்ளது ஒரு மலைப்பாம்பு
கான்பூர்: பஸ்ஸுக்குள்ளேயே ஹாயாக படுத்து தூங்கியது யார்னு பார்த்தீங்களா.. இந்த வீடியோதான், இணையத்தில் வேகவேகமாக ஷேர் ஆகி கொண்டிருக்கின்றன..
பொதுவாக, பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும், செய்திகளும் சோஷியல் மீடியாவில் அடிக்கடி வைரலாகி வருகிறது.. அதற்கு காரணம், பாம்பை கண்டு அனைவருக்கும் பீதி இருப்பதால், அந்த வீடியோ மேலும் கிலியை தந்துவிடுகிறது.
இப்படித்தான், சில நாட்களுக்கு முன்புகூட ஒரு பெண், 40, 50 கருநாகங்களை, பாத்ரூமில் வைத்து, தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்து கொண்டிருந்தார்..

ராஜநாகம்
அந்த ராஜநாகங்களும் பெண்ணுக்கு கட்டுப்பட்டு, அவர்முன்பு வளைந்து மண்டியிட்டு பாத்ரூமிலேயே விழுந்து கிடந்தன. இந்த வீடியோ காண்போருக்கு அதிர்ச்சியை தந்துவிட்டது. இன்னொரு பாம்பு வீடியோவும் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் இதை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.. அந்த வீடியோவில் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கி, சாலையில் நடக்கிறார்..

மூக்கணாங்கயிறு
இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த சாலையின் நடுவில் ஒரு பாம்பு உள்ளது.. சாலையின் இரு பக்கமும் அடர்ந்த காட்டுப்பகுதி தெரிகிறது.. இந்த பாம்பின் அருகில், அந்த நபர் வேகவேகமாக செல்கிறார்.. உடனே அவருடன் வந்திருந்த மற்ற நண்பர்கள் வாகனத்தில் இருந்தபடியே, "கிட்டபோக வேண்டாம்" என சத்தம் போடுகிறார்கள்.. ஆனாலும் அந்த நபர் எதையும் பொருட்படுத்தாமல், அந்த பாம்பின் அருகில் சென்று, டக்கென அதன் வாலை பிடித்து, பக்கத்தில் இருக்கும் காட்டில் போடுகிறார்.. அந்த பாம்பும் காட்டுப்பக்கமாக ஊர்ந்து செல்கிறது. இந்த வீடியோவை பார்க்கும்போது, வெலவெலத்து போகிறது.

மலைப்பாம்பு
இப்போது இன்னொரு வீடியோவும் வைரலாகிறது.. உபி மாநிலம் ரேபரேலியில் ரேயான் என்ற இண்டர்நேஷனல் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த ஸ்கூல், நகரத்துக்கு வெளியே இயங்கிவருவதால், பஸ் வசதிகள் உள்ளன.. அந்தவகையில், நிறைய ஸ்கூல் பஸ்கள் சாலையோரம் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பஸ்ஸில் மலைப்பாம்பு ஒன்று ஏறிவிட்டது.. அந்த மலைப்பாம்பு வயிறு பெரிசாக காணப்பட்டது.. என்ன விஷயம் என்றால், அந்த கிராமத்தில் ஒரு ஆட்டுக்குட்டியை அப்படியே லபக்கென விழுங்கிவிட்டு, இந்த பஸ்ஸில் படுத்து ரெஸ்ட் எடுப்பதற்காக வந்திருக்கிறது..

ஹாயாக பஸ்ஸூக்குள்
பஸ்ஸூக்குள் அவ்வளவு பெரிய பாம்பை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் பயந்துவிட்டார்கள்.. உடனே பள்ளி ஊழியர்களுக்கு தகவல் தரவும், அவர்கள் வனத்துறையினருக்கு விஷயத்தை சொல்லி வரவழைத்தனர்... வனத்துறை ஊழியர்கள் வந்துபார்த்தால், பஸ் சீட்டுக்கு அடியில் ஹாயாக படுத்துக் கொண்டிருந்தது அந்த பாம்பு.. உடனே ஒரு பெரிய குச்சியை எடுத்து வந்து, அந்த பாம்பை லேசாக குத்தி அதை அந்த இடத்திலிருந்து நகரும்படி செய்தனர்.. பிறகு, பாம்பு பிடிப்பவர்கள் அந்தப் பாம்பை சாக்குமூட்டைக்குள் அனுப்ப முயன்றனர்.. ஆனால் அந்த பாம்பு, சாக்குமூட்டையை பார்த்துமே கடிக்க வந்துவிட்டது.. அதனால் எப்படி பிடிப்பது என தெரியாமல் அனைவரும் விழித்தனர்..

பஸ் இன்ஜின்
ஆனால், அதற்குள் பாம்பு, பஸ் இன்ஜினில் போய் படுத்துக் கொண்டது.. இறுதியில், அதன் உடலில் ஒரு கயிறு கட்டி, அதற்கு பிறகு பாம்பை வெளியில் இழுத்தனர்.. பல நேர போராட்டத்துக்கு பிறகு, பாம்பு பிடிபட்டது.. அதனை வனத்துறையினர் பத்திரமாக எடுத்துச் சென்றனர்... அதற்கு பிறகு, அந்த இடத்தில் ஸ்கூல் பஸ்களை நிறுத்த டிரைவர்கள் நடுநடுங்கிவிட்டனர்.. இப்போது அந்த இடத்திலிருந்து, அகற்றப்பட்டு பள்ளிக்கு அருகில் வேறு இடத்தில் கொண்டு போய் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்... ஆனால், அந்த ஆட்டுக்குட்டியை பாம்பு விழுங்கியிருக்குமா என்றுதான் தெரியவில்லை..!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications