பெங்களூருவில் தொடரும் கனமழை.. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
பெங்களூருவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் தெருக்களில் ஆறுபோல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பெங்களூரு: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இடியும் மின்னலுமாய் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெங்களூருவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

நேற்று இரவு பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வானிலை மையத்தின் கணிப்பு பொய்யாகவில்லை. வியாழக்கிழமை இரவும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சியை சமாளிக்க செயற்கை மழை பெய்விக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் கர்நாடக அரசு அறிவித்தது. அதன்படி, செயற்கை மழை பெய்விக்கும் பணிகள் கர்நாடகத்தில் மும்முரமாக நடைபெற்று வந்தது.
"Rainy Bangalore Street" . . . #bangalore #india #karnataka #asia #instagram #travel #traveldiaries #picture #pe… https://t.co/nyt7IAViiy pic.twitter.com/uenZw3l1YS
— Srinivas / LucasKane (@Winshot) August 24, 2017
இந்நிலையில், செயற்கை மழை பெய்விக்கும் பணிகளை நேற்று பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்தில் அமைச்சர் எச்.கே.பட்டீல் துவக்கி வைத்தார்.
இதனையடுத்து, அமெரிக்காவில் இருந்து அதிநவீன வசதிகள் கொண்ட அந்த விமானம் பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேக்கல், ராமநகர் மாவட்டங்களில் வானில் பறந்தபடி செயற்கை மழை பெய்வதற்காக ரசாயன பொடிகளை தூவியதை அடுத்து கருமேகங்கள் திரண்டு மழை பெய்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications