புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. மத்திய நீர்வள ஆணையம் வார்னிங்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.
டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமிழை தொடங்கியது. தொடங்கியதுமே அதிரடி காட்டிய பருவமழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கியது.
வங்கக்கடலில் நேற்று உருவான ஓகி புயலால் தென் தமிழகம் நல்ல மழையை பெற்றது. இதனால் தென் மாவட்டங்களில் உள்ள ஆறுகள், அணைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன.

2 நாட்களில் வலுப்பெறும்
இந்நிலையில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த தாழ்வுநிலை இன்னும் 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் கூறியது.

மீண்டும் நல்ல மழைக்கு வாய்ப்பு
மேலும் அந்த வானிலை மையம் அடுத்த நான்கு நாட்களில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகத்தை நோக்கி நகரும் என்றும் தெரிவித்தது. இதனால் வட தமிழகம் மீண்டும் ஒரு நல்ல மழையை பெறும் என்று கூறப்பட்டது.

மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை
தனியார் வானிலை அமைப்புகளும் சென்னை உட்பட வட தமிழகம் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் நல்ல மழையை பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தன. இந்நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வால் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஆபத்து
மேலும் அடுத்த 2, 3 நாட்களுக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது என்றும் மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications