லலித் மோடிக்கு யார் உதவியிருந்தாலும் தப்பு தப்பு தான்: பாஜக எம்.பி. ஆர்.கே. சிங்
டெல்லி: நாட்டை விட்டு தப்பியோடிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவி செய்தது தவறு என பாஜக எம்.பி ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி நாட்டை விட்டு தப்பியோடி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவி செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா கடந்த ஆண்டு லண்டனுக்கு சென்று லலித் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பாஜக எம்.பி. ஆர்.கே. சிங் கூறுகையில்,
நாட்டைவிட்டு தப்பியோடியவருக்கு யார் உதவு செய்தாலும் அது தவறு தான். இது சட்டப்படியும், நெறிமுறைப்படியும் தவறு ஆகும். நாட்டை விட்டு தப்பியோடியவரை யார் சந்தித்தாலும் அதுவும் தவறே. அவருக்கு யார் உதவி செய்திருந்தாலும் அது முற்றிலும் தவறு.
நான் இங்கு யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. லலித் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வந்து அவரை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்றார்.
அவர் லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா மற்றும் வசுந்தராவின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்களைப் பற்றி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications