ஹேமமாலினி தினமும் குடிக்கிறார், அவர் என்ன விவசாயிகளை போன்று தற்கொலையா செய்தார்?: எம்.எல்.ஏ.

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஹேமமாலினி தினமும் குடிக்கிறார் அதற்காக அவர் என்ன தற்கொலையா செய்து கொண்டார் என மகாராஷ்டிரா மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. பச்சு காது விவசாயிகள் தற்கொலை குறித்து பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.வான பச்சு காது நாந்ததில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

ஹேமமாலினி

ஹேமமாலினி

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள மதுப்பழக்கம் காரணம் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நடிகை ஹேமமாலினி தினமும் மது அருந்துகிறார், அவர் என்ன தற்கொலையா செய்து கொண்டார்?

தவறு

தவறு

பிள்ளைகளின் திருமண செலவால் ஏற்படும் நிதி நெருக்கடியை தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் தவறான காரியம் ஆகும்.

கட்காரி

கட்காரி

நிதின் கட்காரி தனது மகனின் திருமணத்திற்கு ரூ. 4 கோடி செலவு செய்தார். அதற்காக அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? மதுப் பழக்கம், நிதிச் சுமைக்காக தற்கொலை செய்வது முட்டாள்தனம்.

பணம்

பணம்

விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு பணம் இல்லாததே காரணம். விவசாயிகளின் தயாரிப்பு அதிகரித்தாலும் அவர்களின் வருமானம் மட்டும் அதிகரிப்பது இல்லை என்று பேராசிரியர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் என்றார் பச்சு காது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An independent MLA from Maharashtra made an unpleasant comparison while dismissing the claim that alcohol consumption was responsible for farmers' suicide.
Please Wait while comments are loading...