நடிகை ஹேமமாலியின் சொத்து மதிப்பு ரூ.192 கோடி, கடன் ரூ. 21 கோடி
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நடிகை ஹேமமாலியின் சொத்து மதிப்பு ரூ.192 கோடி ஆகும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் பாஜக சார்பில் இந்தி நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது அவர் தனது சொத்து விவரங்களை சமர்பித்தார். அதன் விவரம் வருமாறு,

கையிருப்பு பணம்
ஹேமமாலினியிடம் ரூ.12 லட்சத்து 52 ஆயிரத்து 552 கையிருப்பு உள்ளது. மேலும் அவரது கணவர் நடிகர் தர்மேந்திராவிடம் ரூ. 25 ஆயிரத்து 802 கையிருப்பு உள்ளது.

வங்கி
வங்கியில் ஹேமமாலினியின் பெயரில் ரூ. 1 கோடியே 12 லட்சத்து 7 ஆயிரத்து 734ம், அவரது கணவர் பெயரில் ரூ. 33 லட்சத்து 25 ஆயிரத்து 787ம் உள்ளது.

பங்குகள்
ஹேமமாலினி பங்குகளில் ரூ. 82 லட்சத்து 49 ஆயிரத்து 208ம், அவரது கணவர் ரூ.28 லட்சத்து 71 ஆயிரத்து 325ம் முதலீடு செய்துள்ளனர். மேலும் தேசிய சேமிப்பு பத்திரங்களில் ஹேமா ரூ. 4 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

வட்டி
ஹேமா கொடுத்துள்ள கடன்களில் இருந்து அவருக்கு ரூ. 43 லட்சத்து 9 ஆயிரத்து 508 வட்டியாக வருகிறது. அவரது கணவருக்கு ரூ. 2 கோடியே 68 லட்சத்து 2 ஆயிரத்து 904 வட்டி வருகிறது.

கார், நகை
ஹேமமாலினியிடம் ரூ. 38 லட்சத்து 39 ஆயிரத்து 213 மதிப்புள்ள காரும், அவரது கணவரிடம் ரூ. 52 ஆயிரத்து 313 மதிப்புள்ள காரும் உள்ளது. இது தவிர ஹேமாவிடம் ரூ. 1 கோடியே 95 லட்சத்து 97 ஆயிரத்து 174 மதிப்புள்ள நகைகளும், அவரது கணவரிடம் ரூ. 53 லட்சத்து 10 ஆயிரத்து 133 மதிப்புள்ள நகைகளும் உள்ளன.

நிலம்
ஹேமாவின் பெயரில் நிலம் எதுவும் இல்லை. ஆனால் அவரது கணவர் பெயரில் ரூ. 6 லட்சத்து 77 ஆயிரத்து 673 கொடுத்து வாங்கிய 11 ஏக்கர் நிலமும், ரூ. 19 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 7 ஏக்கர் நிலமும் உள்ளது.

வீடு
ஹேமா பெயரில் ரூ. 57 கோடியே 38 ஆயிரத்து 440 மதிப்புள்ள வீடும், அவரது கணவர் பெயரில் 106 கோடியே 55 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள வீடும் உள்ளது. ஆக ஹேமமாலியின் சொத்து மத்திப்பு ரூ.192 கோடியே 60 லட்சத்து 15 ஆயிரத்து 620 ஆகும்.

கடன்
ஹேமா வங்கியில் ரூ. 13 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்து 245 கடன் வாங்கியுள்ளார். மேலும் பிறரிடம் அவர் ரூ. 7 கோடியே 95 லட்சத்து 6 ஆயிரத்து 13 கடன் வாங்கியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications