"நான் முதல்வர்.. நாட்டை விட்டு ஓடவா போறேன்?".. அமலாக்கத்துறை சம்மன்.. ஹேமந்த் சோரன் 'சுளீர்' கேள்வி
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தை குத்தகை விட்டதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நான் ஒரு அரசியல்வாதி. தற்போது முதலமைச்சராக பணியாற்றி வருகிறேன், ஆனால் 'நாட்டை விட்டு ஓடிப்போகும் நபர்' என்கிற ரீதியில் என்னை அமலாக்கத்துறை அணுகுகிறது" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், "பெரும் பணக்காரர்களை தவிர எந்த அரசியல்வாதியும் நாட்டை விட்டு ஓடி ஒளிந்துகொள்வதில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜக
கடந்த 2019ல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் ஜார்கண்ட முக்தி மோர்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு இருக்கும் நிலையில், அம்மாநில அரசு தொடர் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அதாவது ஹேமந்த் சோரன் வசம் இருந்த நிலக்கரி சுரங்கத்துறையில் ஊழல் செய்து அதன் மூலம் முறைகேடாக ரூ.1,000 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியதாக பாஜக குற்றம்சாட்டியது.

குற்றச்சாட்டு
இது குறித்து விசாரித்த தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 9-ஏ மீறப்பட்டிருப்பதாகக்கூறி ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், இது அனைத்தும் 'ஜார்கண்ட் முக்தி மோர்சா-காங்கிரஸ்' கூட்டணி அரசை சீர்குலைக்கும் பாஜக சதியின் ஒரு அங்கம் என்று ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டியுள்ளார்.

நான் முதலமைச்சர்
அமலாக்கத்துறை இன்று ஆஜராக சொல்லியிருந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்லுவதற்கு முன்னதாக தன் வீட்டிற்கு முன் கூடியிருந்த கட்சி தொண்டர்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது மேற்குறிப்பிட்ட கருத்தை அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நான் முதலமைச்சராக அரசியல் சாசன பதவி வகிக்கிறேன். ஆனால் விசாரணை நடக்கும் விதம், விசாரணைக்கு நான் அழைக்கப்பட்ட விதம் என எல்லாவற்றையும் பார்க்கும்போது நாட்டை விட்டு தப்பியோடுபவர்களை அணுகுவதை போல இருக்கிறது. எனக்கு தெரிந்து தொழிலதிபர்கள்தான் நாட்டைவிட்டு ஓடியுள்ளார்களே தவிர அரசியல்வாதிகள் அல்ல" என்று கூறியுள்ளார்.

கைது
மேலும், "கடந்த 2019 முதல் சதிகாரர்கள் ஆட்சியை கவிழ்க்க நீர்மூழ்கி கப்பலை போல வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளியில் தலைகாட்ட பயந்தார்கள். தற்போது அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறார்கள்" என்றும் விமர்சித்தார். முன்னதாக பாஜகவின் குற்றச்சாட்டு தொடர்பாக ஹேமந்த் சோரனின் உதவியாளர்கள் பச்சு யாதவ் மற்றும் பிரேம் பிரகாஷ் ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

சுரங்கம்
முறைகேடு குற்றச்சாட்டை ஹேமந்த் கடுமையாக மறுத்து வருகிறார். அதாவது, "ரூ.1,000 கோடி அளவில் மோசடி செய்ய வேண்டும் எனில் அதற்கு தற்போது உள்ள சுரங்கத்தை விட நான்கு மடங்கு பெரிய நிலக்கரி சுரங்கம் தேவைப்படும். தற்போதுள்ள சுரங்கத்திலிருந்து ரூ.750 கோடிதான் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. எனவே இதைவிட பெரிய சுரங்கம் எதுவும் இங்கு கிடையாது. சரி நீங்கள் சொல்வதை போல பெரிய சுரங்கம் இருக்கிறது என்று வைத்துக்கொண்டாலும் அதிலிருந்து நிலக்கரியை கொண்டு செல்ல, 20,000 ரயில்வே ரேக்குகள் தேவைப்படும், அல்லது 33 லட்சம் லாரிகள் தேவைப்படும்.

ரயில்வே
இந்த அளவு நிலக்கரிகளை முறையான ஆவணங்கள் இன்றி ரயில்வே துறை கொண்டு செல்லாது. எனவே எந்த ரயில்வே அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தீர்கள்? என் மீது குற்றச்சாட்டு வைக்கும் முன்னர் நீங்கள் எந்த ஆவணங்களையும் சரிபார்க்கவில்லை என்று நினைக்கிறேன்" என கூறியுள்ளார். எம்எல்ஏக்கள் பேரம், நம்பிக்கையில்லா தீர்மானம் தற்போது அமலாக்கத்துறை விசாரணை என ஹேமன் சோரன் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வருவதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு தீவிரமடைந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications