ஒரு வீரருக்கு பதில், 10 எதிரியின் தலையை எடுப்போம் என்றது வெற்று சவடாலா? ராணுவ வீரர் தாய் கொதிப்பு
ஒரு இந்திய வீரரின் இழப்பிற்கு 10 எதிரி நாட்டு ராணுவ வீரர்களின் தலைகளை எடுப்போம் என்று மத்திய அரசு கூறியது வெறும் வாய்ச் சவடால்தானா என்று கொந்தளிக்கிறார்கள் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின்குடும்பத்தினர்
டெல்லி:எல்லையில் சண்டையில் மடியும் ஒரு இந்திய வீரரின் தலைக்கு எதிரிகளின் 10 தலையை எடுப்போம் என்ற பாஜக தலைமையிலான மத்திய அரசின் வாக்குறுதி என்ன ஆயிற்று என்று பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது ராணுவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்து வெறியாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இது இந்திய ராணுவத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல, கடந்த 2013-ம் ஆண்டு எல்லையில் இந்திய வீரர் லாஞ்ச் நாயக் ஹேம்ராஜ் உடல் பாகிஸ்தான் ராணுவத்தால் சிதைக்கப்பட்டது. மீண்டும் காட்டுமிராண்டித்தனமாக பாகிஸ்தான் ராணுவம் நடந்துள்ளதைக் கேள்விப்பட்டு கொதித்துப் போயுள்ளார் 'லேன்ஸ் நாயக்' ஹேம்ராஜின் தாயார்.
இது குறித்து அவர் பேசுகையில் "அவர்கள் என்னுடைய மகனின் தலையை துண்டித்தார்கள். இப்போது மீண்டும் அது போன்ற சம்பவங்கள் நடப்பதை பார்த்து வருகிறோம். நம்முடைய வீரர்களின் ஒரு தலையைத் துண்டித்தால் எதிரியின் 10 தலையைக் கொண்டு வருவோம் என மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.ஆனால் இப்போதுவரையில் ஒரு நடவடிக்கையும் கிடையாது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இப்போது கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும்," என்றார்.
அதே போல ஹேம்ராஜ் சகோதரர் கூறுகையில், "நம்முடைய ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் வலியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததும் மிகவும் மோசமான நிலையே. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு கடும் நடவடிக்கையை எடுக்கவேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications