டெல்லியில் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 11 உடல்கள்... பரபர பின்னணி!
டெல்லியில் ஒரு வீட்டில் 11 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

டெல்லி: டெல்லி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 11 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
டெல்லி புராரி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
7 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 3 இளவயதினர் உள்பட 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்த பரபரப்பு பின்னணி இதோ.
வட டெல்லியின் புராரி ஏரியாவில் உள்ளது சாந்த் நகர். இங்கு இரண்டடுக்கு மாடி கொண்ட ஒரு வீடு உள்ளது. இதில் 11 பேர் வசித்து வந்தனர். இவர்கள் மளிகை மற்றும் பிளைவுட் பிசினஸ் செய்து வந்தனர்.
|
தரையில் ஒரு சடலம்
இன்று 11 பேரில் 10 பேரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன. எஞ்சிய ஒருவரின் உடல் மட்டும் தரையில் கிடந்தது. அவருக்கு 75 வயது இருக்கும். மற்றவர்களின் கண்கள் மற்றும் வாயில் துணியால் கட்டப்பட்டிருந்தன.
|
பால் வாங்க சென்றவர் புகார்
எப்போதும் மளிகை கடை 6 மணிக்கெல்லாம் திறந்துவிடுவர். ஆனால் இன்று 7.30 மணியாகியும் கடை திறக்கப்படவில்லை. மேலும் வீடும் திறந்திருந்தது. கடை சனிக்கிழமை 11.45 மணி வரை திறந்து வைத்துள்ளனர். இது குறித்து பால் வாங்க கடைக்கு சென்றவர் சந்தேகத்தின் பேரில் உள்ளே சென்று பார்த்துவிட்டு போலீஸுக்கு புகார் அளித்தார்.
|
போலீஸ் விசாரணை
அதன் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 11பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனரா இல்லை இவர்களை கொலை செய்து யாரேனும் தூக்கில் தொங்கவிட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

இறந்தவர்களில் வயதான பெண்
இவர்கள் 11 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே வந்தவர்கள். இறந்தவர்களில் வயதான பெண் ஒருவர், அவரது இரு மகன்கள், அவர்களது மனைவிகள், இரு சிறுவன்கள் 16 முதல் 17 வயது கொண்டவர்கள், மற்ற 4 பெண்கள் ஆகியோராவர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications