Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாவ்! அமெரிக்கன் டீ முதல் அஸ்ஸாம் டீ வரை.. சபர்மதி ஆசிரமத்தில் வெல்கம் டிரிங் ஏற்பாடுகள் ஜரூர்!

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அங்கு வழங்கப்படவுள்ள உணவுகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    Schedule of President Trump’s India visit | இன்று இந்தியா வரும் டிரம்பின் பயண விபரங்கள்

    இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இந்தியாவுக்கு வருமாறு டிரம்பிற்கு தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

    இதனை ஏற்று இன்று இந்தியாவுக்கு வருகிறார். இதற்கு காரணமாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை கவர்வதற்காக என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென தெரியவில்லை.

    டிரம்ப்

    டிரம்ப்

    இன்று அகமதாபாத் விமான நிலையத்திற்கு வரும் டிரம்ப் உள்ளிட்டோர் 22 கி.மீ. தூரத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு காரில் செல்கின்றனர். அங்கு அவர் அங்கு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துகிறார். காந்தியின் நினைவாக நூல் ராட்டையையும் காந்தி குறித்த புத்தகத்தையும் டிரம்பிற்கு பரிசாக வழங்குகிறார் மோடி.

    இளநீர்

    இளநீர்

    இந்த நிலையில் சபர்மதி ஆசிரமத்தில் டிரம்பிற்கு வழங்கப்படும் ஸ்னாக்ஸ் குறித்த மெனு கிடைத்துள்ளது. அதற்கு ஹாய் டீ மெனு என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் வரவேற்பு பானமாக ஆரஞ்ச், கொய்யா ஆகிய கேன் ஜூஸ்களில் அவருக்கு விருப்பமானவையும் இளநீரும் வழங்கப்படும்.

    பேரிச்சம் பழம்

    பேரிச்சம் பழம்

    டிரம்ப் ஆசிரமத்திற்கு வருவது முதல் அங்கிருந்து வெளியேறும் வரை லைப் டீ கவுன்ட்டர்கள் செயல்படும். இங்கு அமெரிக்கன், பிரிட்டிஷ், டார்ஜிலிங், அஸ்ஸாம், ஏர்ல் கிரே, கிரீன் மற்றும் லெமன் டீ கிடைக்கும். தேன், 7 தானியங்கள், சாக்கோ சிப்களால் செய்யப்பட்ட பிஸ்கெட்டுகள், வறுத்த முந்திரி, பாதாம் பருப்புகள், ஆப்ரிகாட், பேரிச்சம் பழங்களும் கிடைக்கும்.

    கமான்

    ஸ்னாக்ஸ் கவுன்ட்டரில் டிரம்பிற்கு மிகவும் பிடித்த குஜராத்தி உணவான கமான், பிரக்கோலி மற்றும் கார்ன் பட்டர் சமோசா பரிமாறப்படும், ஆப்பிள் பை, காஜு கட்லி, பழத் துண்டுகளும் பரிமாறப்படுகிறது. டிரம்ப் அசந்து போகும் அளவுக்கு இந்த உணவுகளை கைதேர்ந்த சமையலர்கள் கொண்டு தயார் செய்யப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+