சசிகலாவுக்கு விஐபி அறை மறுப்பு.. வீட்டுச் சாப்பாடுக்கும் அனுமதி மறுப்பு.. நீதிபதி அதிரடி
பெங்களூர் சிறையில் அடைக்கப்படவுள்ள சசிகலாவுக்கு வீட்டுச் சாப்பாடு தரவும், விஐபி அறை ஒதுக்கவும் நீதிபதி அனுமதி மறுத்து விட்டார்.
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்படும் சசிகலா தனது விருப்பப் பட்டியல் ஒன்றை சிறை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார். இதை மனுவாகவும் இன்று அவரது வக்கீல்கள் நீதிபதியிடம் அளித்தனர். ஆனால் அதில் பல சலுகைகளை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார்.
கிட்டத்தட்ட 3.6 ஆண்டுகளை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில்தான் கழிக்கவுள்ளார் சசிகலா. அவருடன் இளவரசி, சுதாகரனும் சிறையில் கழிக்கவுள்ளனர். இந்த நிலையில் சிறையில் சில வசதிகளை எதிர்பார்த்து அதை மனுவாக தனது வக்கீல்கள் மூலம் நீதிபதியிடம் அளித்தார்.
அவற்றில் பெரும்பாலானவற்றை இன்று நீதிபதி நிராகரித்து விட்டார். சில கோரிக்கைகள் மட்டும் ஏற்கப்பட்டது.

வெஸ்டர்ன் டாய்லெட்
வெஸ்டர்ன் டாய்லெட் வேண்டும் என்று கேட்டிருந்தார் சசிகலா. அதேபோல வீட்டுச் சாப்பாடு தேவை, வாக்கிங் போக இடம் தேவை, 24 மணி நேர தண்ணீர் வசதி தேவை என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதில் வீட்டுச் சாப்பாடு, வாக்கிங் வசதி நிராகரிக்கப்பட்டு விட்டது. டாய்லெட்டும் ஒத்துக் கொள்ளப்படவில்லை.

கட்டில் டிவி
சசிகலாவுக்கு கட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாம். அதேசமயம், டிவி தரப்படவில்லை என்று தெரகிறது.அவருக்கு ரத்தக் கொதிப்பு,சர்க்கரை நோய் இருப்பதால்தான் கட்டில் வசதியாம். இல்லாவிட்டால்தான் தரைதான் கிடைத்திருக்கும்.

விஐபி அறை கிடையாது
அதேபோல அவர் விஐபி அறையும், ஏசி அறையும் கேட்டிருந்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டு விட்டதாம். கைதிகளுக்கு சாதாரணமாக ஒதுக்கப்படும் அறைதான் தரப்பட்டுள்ளதாம்.

பாதுகாப்பு வசதி
சசிகலா விஐபி கைதி என்பதால் அவருக்கு சிறையில் பாதுகாப்பும் வழங்கப்படும். 24 மணி நேர பாதுகாப்பு அவருக்குக் கிடைக்கும். முன்பு ஜெயலலிதாவுடன் சேர்ந்து தங்கியிருந்தார். இப்போது ஜெயலலிதா இல்லாமல் தங்கப் போகிறார்.

2வது முறை
பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சசிகலா வருவது இது 2வது முறையாகும். முன்பு ஜெயலலிதாவுடன் இங்கு 21 நாட்கள் தங்கியிருந்தது நினைவிருக்கலாம். தற்போது 3.6 வருட காலம் அவர் தங்கப் போகிறார்.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications