மனுஷி சில்லாரை உலக அழகியாக்கிய விஷயம் எது தெரியுமா?- வைரலாகும் வீடியோ #MissWorld2017
உலக அழகியாக மானுஷி சில்லரிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலுமே அவரை அவருக்கு அப்பட்டம் வழங்கியதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
Recommended Video

சண்டீகர்: இந்தாண்டின் உலக அழகியாக மானுஷி சில்லர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உலக அழகி பட்டமானது வெறும் அழகுக்காக அளிக்கப்படுவது அல்ல. அந்த நபரின் புத்தி சாதுர்யம், முடிவு எடுக்கும் திறன், அனைவரையும் கவரும் பதில் ஆகியவற்றை கொண்டே வழங்கப்படுகிறது.
கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் இந்த பட்டம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சீனாவின் சான்யாவில் நடைபெற்ற உலக அழகி பட்டத்துக்கான போட்டியில் 108 நாடுகளை சேர்ந்தோர் கலந்து கொண்டனர். 118 பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

நெகிழ்ச்சியான பதில்
அவர்களில் உலக அழகியாக இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மானுஷி சில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேர்வு செய்வதற்கு முன்னால் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மானுஷி மிகவும் நெகிழ்ச்சியாக பதிலளிதார்.
|
தாய்தான்
அதாவது உலகில் அதிக சம்பளம் பெறும் தகுதி எந்த தொழிலுக்காக வழங்கப்படுகிறது, ஏன் என்பது கேள்வியாகும். அதற்கு மானுஷியின் பதில், நான் எனது தாயுடன் மிகவும் பிணைப்பாக இருப்பதால் உலகிலேயே அதிக மதிப்புக்குரியவர் தாய்தான்.

அன்பு, மரியாதை
ஊதியம் என்று பார்த்தோமேயானால் அது பணமாக இருக்காது, நாம் அவரிடம் செலுத்தும் அன்பும் மரியாதையும்தான் என கருதுகிறேன். எனது வாழ்வில் என் தாய்தான் மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தார். எல்லா தாய்களும் தங்கள் குழந்தைகளுக்காக நிறைய தியாகங்களை செய்கின்றனர்.

மானுஷி தேர்வு
ஆகவே தாய்க்கு அதிக ஊதியமும், அன்பும், மரியாதையும் செலுத்த வேண்டும் என்று கருதுகிறேன் என்று மானுஷி தெரிவித்தார். அப்போது அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது. இதையடுத்து உலக அழகி யார் என்ற அறிவிப்பின்போதே அரங்கத்தில் இருந்தோர் இந்தியா இந்தியா என்று கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மானுஷி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications