Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவர்தாங்க ரவீந்திர ஜடேஜாவை மணக்கப் போகும் ரீவா சோலங்கி!

Subscribe to Oneindia Tamil

ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்குத் திருமண் முடிவாகியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜீனியர் ரீவா சோலங்கியை மணக்கவுள்ளார் ஜடேஜா.

தற்போது டெல்லியில் தங்கியிருந்து ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் ரீவா. இந்த நிலையில் அவருக்கும் ஜடேஜாவுக்கும் திருமணம் பேசி முடித்துள்ளனர் இரு வீட்டாரும்.

ரீவாவின் தந்தை தொழிலதிபர் ஆவார். தாயார் பிரபுல்லாமா சோலங்கி ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில்தான் சுரேஷ் ரெய்னாவுக்குத் திருமணமானது. ரோஹித் சர்மா செட்டிலானார். யுவராஜ் சிங்குக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது ஜடேஜா திருமண பந்தத்தில் புகுகிறார்.

மேக்கப் ரூமாகும் டிரஸ்ஸிங் ரூம்!

மேக்கப் ரூமாகும் டிரஸ்ஸிங் ரூம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு இது திருமண சீசன் போல. அடுத்தடுத்து ஒவ்வொருவராக திருமணமாகி வருகின்றனர். சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா திருமணம் சமீபத்தில் நடந்தது.

ஹர்பஜன், வருண் ஆரோன்

ஹர்பஜன், வருண் ஆரோன்

அதேபோல ஹர்பஜன் சிங், வருண் ஆரோன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது. மோஹித் சர்மாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த வரிசையில் தற்போது ஜடேஜா இணைகிறார்.

புது அணியில் புது மாப்பிள்ளை

புது அணியில் புது மாப்பிள்ளை

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் ஆடி வந்த ரவீந்திர ஜடேஜா இந்த சீசனில் தனது சொந்த மாநிலமான குஜராத் லயன்ஸ் என்ற பெயரில் அமைந்துள்ள ராஜ்கோட் அணியில் ஆடப் போகிறார். தற்போது அதே ஊருக்கு மாப்பிள்ளையாகவும் போகிறார்.

வருண் ஆரோன்

வருண் ஆரோன்

கடந்த திங்கள்கிழமைதான் வருண் ஆரோன் - அவரது காதலி ராகினியின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ரோஹித் - ரித்திகா

ரோஹித் - ரித்திகா

கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதிதான் ரோஹித் சர்மா, ரித்திகா சஜ்தே திருமணம் நடந்தேறியது. இதுவும் காதல் திருமணம்தான்.

பஜ்ஜி திருமணம்

பஜ்ஜி திருமணம்

இதேபோல இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா திருமணம் அக்டோபர் 29ம் தேதி நடந்தது. சச்சின் போய் வாழ்த்தி விட்டு வந்தார்.

பிரிட்டிஷ் நடிகையுடன் யுவராஜ்

பிரிட்டிஷ் நடிகையுடன் யுவராஜ்

யுவராஜ் சிங், பிரிட்டிஷ் நடிகை மாடல் ஹேஸல் கீச் நிச்சயதார்த்தம் இந்தோனேசியாவின் பாலி தீவில் தீபாவளி தினத்தன்று நடந்தேறியது.

அடுத்து ஜடேஜா

அடுத்து ஜடேஜா

இந்த நிலையில் தற்போது ஜடேஜாவும் திருமண பந்தத்திற்குள் புகுகிறார். இதன் மூலம் டோணி குரூப்பைச் சேர்ந்த அனைவருமே பேச்சல் என்ற வட்டத்திலிருந்து விடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்ப கோஹ்லி.. எப்போ?

அப்ப கோஹ்லி.. எப்போ?

இன்னும் சிலர் இருந்தாலும் கூட, விராத் கோஹ்லிதான் தற்போதைக்கு இந்ந்திய அணியில் "மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலர்". அவருக்கு எப்ப கால்கட்டு என்றுதான் தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+