அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.
இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வென்றுவிட்டது.
இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்க வைத்து உள்ளது. மூன்றாவது டெஸ்ட் இன்று இந்தூரில் நடக்கிறது. இன்று நடக்கும் மேட்சில் இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் ஆடுகிறார்கள். முதல் இரண்டு போட்டிகளில் மோசமாக சொதப்பிய ராகுல் இன்று நீக்கப்பட்டு உள்ளார்.

விக்கெட்
இன்று முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் நன்றாக விக்கெட்டுகளை எடுத்தது. ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே 3 பவுண்டரி அடித்து வேகம் காட்டினார். கில்லும் 3 பவுண்டரி அடித்தார். ஆனால் ரோஹித் சர்மா குன்னமென் பவுலிங்கில் தேவையின்றி வெளியே இறங்கி வந்து அடிக்க பார்த்தார். இதனால் தேவையின்றி ஸ்டம்பிட் ஆன அவர் 12 ரன்களுக்கு பெவிலியன் சென்றார். அதேபோல் கில் மீண்டும் குன்னமென் ஓவரில் 21 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் கோலி மட்டும் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இந்திய அணி சீட்டு கட்டு போல சரிந்தது.

சீட்டு கட்டு
புஜாரா இறங்கி 4 பந்து சந்தித்து இருந்த நிலையில் 1 ரன்கள் எடுத்து லயன் பந்தில் போல்ட் ஆனார். அவரை தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதில் ஜடேஜா இறங்கினார். ஆனால் இவரும் லயன் போட்ட பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முதல் பந்தில் எல்பிடபிள்யூவில் இருந்து ரிவ்யூ மூலம் எஸ்கேப் ஆன ஜடேஜா, அடுத்த பந்திலேயே தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் குன்னமென் பந்தில் டக் அவுட் ஆனார். வந்தார்கள் வீழ்ந்தார்கள் என்பது போல வந்தவர்கள் எல்லோரும் குன்னமென் பவுலிங்கில் சுருண்டனர்.

மோசம்
கோலி மட்டும் நிதானமாக ஆடி 22 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரும் மர்பி பந்தில் அவுட் ஆனார். அவர் போனதும்.. பாஸ் தனியா போகாதீங்க நானும் கூட வரேன் என்று ஸ்ரீகர் பரத்தும் லயன் பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது. தற்போது அக்சர் பட்டேல் - அஸ்வின் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

புஜாரா
இந்த மேட்சில் புஜாரா லயன் ஓவரில் அவுட் ஆனார். ஆப் சைடில் குத்திய பந்து மிக அதிகமாக ஸ்பின் ஆகி லெக் ஸ்டெம்பை தாக்கியது. இந்த விக்கெட்டை பார்த்தது புஜாரா என்ன நடந்தது என்று புரியாமல் அதிர்ச்சி அடைந்தார். இன்னொரு பக்கம் ரோஹித் சர்மாவும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி போனார். பெவிலியனில் இருந்த புஜாரா பந்து மோசமாக ஸ்விங் ஆகிறது என்பதை உணர்ந்து கொண்டார். இதுதான் இன்று இந்திய அணிக்கு எதிராக திரும்பியது. இது இந்திய அணியின் பேட்டிங்கிற்கு கெட்ட செய்தி என்றாலும் இரண்டாவது பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் பெரிய கெட்ட செய்தி ஆகும். அஸ்வின் - அக்சர் பவுலிங் செய்யும் போது ஆஸ்திரேலிய அணி மேலும் விக்கெட்டுகளை இழக்கும் நிலை ஏற்படும். முக்கியமாக இவர்களின் சூழல் ஆஸ்திரேலியாவிற்கு ஆபத்தாக இருக்க போவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த 3வது டெஸ்டும் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications